பக்கம்:தரும தீபிகை 6.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2006 த ரு ம தீ பி ைக இத்தகைய விழுமிய வெந்தனைத் தமக்குத் தலைவனுகப் பெற் றுள்ள மாந்தர் எவ்வளவு பாக்கியசாலிகள்; அந்த நாடு எத்தணை உத்தம நிலையில் உயர்ந்திருந்திருக்கும் என்பன் ஈ ண் டு உய்த் துணரத் தக்கன. இனிய அரசால் மனித இனம் மகிமையுறும். தருமநெறி ஒழுகி உயிரினங்களை உரிமையோடு பாதுகாத்த வரின் அந்த அரசன் அரிய பல மகிமைகளை எளிதே அடைந்து கொள்கிருன். வெற்றியும் புகழும் எவ்வழியும் அவன் பெற்று மகிழ்கிருன். செய்யும் நீதிகள் திவ்விய நிலைகளை அருளுகின்றன. ஆர்கலி ஞாலத்து அறங்காவ லால்சிறந்த பேரருளி ற்ைகுப் பெறலருமை யாதரோ? வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும் போர்மலேந்து வெல்லும் புகழ். (இரும்பல் காஞ்சி) அறத்தின் வழியே ஞாலத்தைக் காத்து வருகிற அரசன் அரிய கீர்த்திகளையும் பெரிய வெற்றிகளையும் யாண்டும் பெற்று விளங்குவான் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. உற்ற ஆட்சியை நெறியே செய்க, உயர்க்க மாட்சி உரிமையாய் வரும். கரும நிலையில் பெருமைகள் விளைகின்றன. கக_ 787 குடியை இனிதோம்பிக் கொற்றம் புரிந்து படிமுழுதும் இன்பம் பரப்பி-மடியின்றி நாடிப் பகையடக்கி கண்ணுனேல் அவ்வேந்தன் பேடியே ஆவன் பிழை. (எ) இ-ள. தனது குடிகளே இனிது பாதுகாத்து வெற்றி கி லே க ளே விளைத்து உலகம் எங்கும் இன்ப நலங்களைப் பரப்பி எதிரிகளை அடக்கி விதி முறையோடு ஆளுகின்றவனே சிறக்க அரசன்; அவ்வாறு ஆளாதவன் இழிக்க பேடியாக் கழிந்து படுவன் என்க. - இது ஆண்மை வழுவின் அவலமாம் என்கின்றது. உலகம் ஆளும் உரிமையோடு பிறந்து வந்துள்ள அரசன் இறந்த மேன்மையில் உயர்ந்து கிற்கிருன். அந்த நிலை எந்த வகை யிலும் நிலைத்து வர அவன் சொந்த நிலைமையை யு ன ர் க் து தொழில் செய்து வர வேண்டும். தன் கடமையைக் கருதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/83&oldid=1327462" இலிருந்து மீள்விக்கப்பட்டது