பக்கம்:தரும தீபிகை 6.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 2007 ன்ெறு கருமங்கள் செய்து வருபவன் எவ்வழியும் பெருமைகள் பெறுகின்ருன். உற்ற உரிமை உறுதியும் ஒளியும் பெற்றுஉயர்ந்து வருவது உடையவன் புரியும் வினையாண்மையாலேயாம். தன் நாட்டில் வாழும் குடிகளை நாட்டத்தோடு பாதுகாப்ப வனே கலம் பல பெறுகின்ருன். காப்பு முறையில் குறை நேரா மல் காத்து வரும் அளவே காவலன் என்னும் பேர் அவனுக்கு உரிமையாய்ப் பூத்து வருகிறது. புரப்பது ஆகிய அச்சிறப்பு நிலை பிழைபடின் அரசனுடைய பிறப்பும் பேரும் பழி படும். மன்னனது ருேம் சிறப்பும் மன்னுயிர் புரக்கும் மாட்சியால் நீட்சியுற்று நிலவுகின்றன. புரப்பவன் பிரபு ஆகிருன்.

  • காப்பே அரசுக்குக் கண் ” என்பது பழமொழி. குடிச னங்களைப் பாதுகாப்பதில் அரசன் எவ்வளவு விழிப் புடையன யிருக்க வேண்டும் என்பதை இது நன்கு விளக்கி யுள்ளது.

ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஈண்டிய புகழுடன் பாண்டிய மன்னன் ஒருவன் மதுரையிலிருந்து அரசு புரிந்தான். அ வ ன் அருந்திறலாண்மையும் பெருகன் மையும் நிறைந்தவன். நிலம் நீர்தி வளி வான் என்னும் ஐந்து பூதங்களின் இயல்பும் அவன் பால் அமைந்திருக்கமையால் பூதப் பாண்டியன் எனப் புகழ் பெற்று நின்ருன், தேசமக்களை அதிக நேசத்தோடு பாதுகாத்து வந்தான் ஆதலால் முதுநீர் உலகம் அதிசய நிலையில் அவனைத் துதி செய்து வந்தது. அவனுடைய கீர்த்திப் பிரதாபங் களைக் கண்டு பொருமை கொண்ட ம று பு ல மன்னர் சிலர் பொருபடை திரட்டிப் போராட நேர்ந்தனர். பகையாய் மூண்டு வந்த அந்த வேங்கர் நிலையை இகழ்ந்து இவன் வெகுண்டு எழுங் தான். அங்கனம் சீறி எழுந்த பொழுது வீர சபதம் கூறினன். அருமையான அவ்வுரைகள் அயலே காண வருகின்றன. மடங்கலின் சினே இ மடங்கா உள்ளத்து அடங்காத் தானே வேந்தர் உடங் கியைந்து என்னெடு பொருதும் என்ப; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணேன் ஆயின் சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறனிலே கிரியா அன்பின் அவையத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/84&oldid=1327463" இலிருந்து மீள்விக்கப்பட்டது