பக்கம்:தரும தீபிகை 6.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2010 த ரும பிே ைக யாமல் ஏந்திய புகழோடு என்றும் இருக்க வேண்டுமாலை மாந்தர் மகிழ்ந்து வர ஒர்ந்து அவன் வினை புரிந்து வர வேண்டும். நீதி முறையே அரசு புரியின் ஆதி பகவன் அருள் வருகி றது; அது வரவே அந்த வேந்தன் எவ்வழியும் திவ்விய மகிமை களை அடைந்து திகழ்கின்ருன். வலியும் வனப்பும் புகழும் உயர் வும் செங்கோலால் பொங்கிப் பொலிவு மிகுந்து வருகின்றன. மன்னவன் வலிசெங் கோலில்ை அன்றி வாளில்ை சேனேயால் இல்லை; நன்னெறி வழுவா மன்னவன் தனக்கு நாடெல்லாம் பேரரண்; உலகில் மன்னுயிர் எல்லாம் அவன் படை அன்னேர் மனம்எலாம் அவனுறை பீடம்; இன்ன தன்மையய்ை அரசளிப் பவனே இகல்செயும் தெறுநரும் உளரோ? (நீதி நூல்.) அரசன் நல்ல நெறியுடையவன் ஆனல் அவனுக்கு எல்லா மேன்மைகளும் வலிமைகளும் உளவா கின்றன; மாந்தர் யாவ ரும் தம் உயிர் என அவனை உரிமையோடு உவந்து போற்றி வரு கின்றனர்; தெய்வத் தேசோடு அவன் சிறந்து விளங்குகின் முன்; அவனுக்கு மாருக யாரும் சேர்கில்லார்; எல்லாரும் இனிய ராப் இணைந்து நிற்பர்என்பதை இங்கேஉணர்ந்துகொள்கிருேம். குடிகள் ம ன ம் மகிழ்ந்து வாழக் கோமுறை புரிபவன் நெடிய வலிகளையுடையவனுய் நிலை பெற்று நிற்கிருன். ந டு உவந்துவர நாதன் உயர்ந்து வருகிறன் என்பது முதுமொழி. அர சனுடைய உயர்ச்சியும் உறுதியும் குடிகளுடைய மகிழ்ச்சியால் விளைந்து மகிமையா வரும் என்பது இதனுல் விளங்கி கின்றது. பெற்ற பிள்ளைகளைப் பெருமையா வளர்த்து வரும் தங்தை போல் உற்ற குடிகளை உரிமையாப் பேணி வருகிற அ | ச ன் உயர்ந்த வெற்றிகளை யடைந்து ஒ வரி பெற்று மிளிர்கின்ருன். மக்களுக்கு நலம் புரிவது மன்னனுக்குக் குல கருமம் ஆதலால் உரிமையான அதனைச் செய்தவன் இருமையும் பெருமைகளைப் பெறுகின்ருன். கருமக் காட்சி தரும ஆட்சியாய் வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/87&oldid=1327467" இலிருந்து மீள்விக்கப்பட்டது