பக்கம்:தரும தீபிகை 6.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2012 த ரும தீ பி ைக மின்றி அவர்க்கு அல்லல் புரிய நேரின் அவர் உள்ளம் நொந்து அவனே எ ஸ்ளி இகழ நேர்வர்; நேர வே அவன் எவ்வழியும் காழ்ந்து இழிவு பல அடைந்து அழிவுற நேர்கின்ருன். கு.பி- நொந்துவரின் )LDگا - சிந்தி விழும் என்னும் பழமொழி கொடுங்கோல் அரசனுடைய அழிவு கி லே ைய விழி கெரிய விளக்கியுள்ளது. வெங்கோலன் விரைந்து வெந்த வீழ்கின்றன். குடியலுைத்து இரந்துவெங் கோலொடு கின்ற முடியுடை இறைவம்ை மூர்க்கனும் பதரே (5அங்தொகை) இனிய நீர்மைகுன்றி அரசன் கொடியன் ஆனல் மூர்க்கன், பதர் என இங்கனம் இழிந்து படுகிருன். பயனுடையவன் மணி யாய் உயர்வடைகிருன், அஃது இல்லாதவன் பதராப் இழிவுறுகி முன். குடி வருந்தில்ை முடி அழிந்து விடும்; அது உவந்தால் அது உயர்ந்து ஒளி பெற்று கிற்கும். நிலைமை தெரிந்து நீதி புரிக. 789 தரும நெறிதழுவித் தக்காரைப் பேணிக் கருமம் கடைபோகச் செய்து-மருமங்கள் யாவும் தெரிந்திங் கவனி புரந்துவரின் தேவும் புகழும் தெளிந்து. (க) இ-ன். புண்ணிய வழிகளைப் பொருந்திக் கண்ணியமான மேலோர் களைப் பேணிக் கருமங்களைக் கருதிச் செய்து அரிய மருமங்களை ஆராய்ந்து தெளிந்து உலகைப் பாதுகாத்து வருகிற அரசனைத் தெய்வம் யாண்டும் புகழ்ந்து போற்றி வரும் எ ன்பதாம். உலக வாழ்க்கையில் இன்பமும் வெற்றியும் மேன்மையும் தக்து மறுமையிலும் பெருமை கருவது கருமமே. அது மருவி வருகிற அளவு மகிமைகள் பெருகி வருகின்றன; ஒருவிய உட னே யாவும் ஒழிந்துபோகின்றன. போகவே புலைகள் ஆகின்றன. பிறப்பிலேயே சிறப்பு அடைந்து வந்துள்ள அரசன் தன் மேன்மையான பிறவிக்கு மூலகார்னமாயிருக்கது கருமமே என்பதை உணர்ந்து கொண்டால் மறந் தும் வழுவாமல் அதனே எவ்வழியும் கழுவி ஒழுகி யாண்டும் விழுமியோனுய் விளங்கி வருவன். உண்மை நிலையைக் கருதியுணரும் உணர்வால் உறுதி நலன்கள் பெருகி உயர்நிலைகள் ஓங்கி ஒளி மிகுந்து வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/89&oldid=1327469" இலிருந்து மீள்விக்கப்பட்டது