பக்கம்:தரும தீபிகை 6.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2014 த ரு ம தீ பி ைக சீற்றம் செற்றுப் பொய் நீக்கிச் செங்கோலினுல் கூற்றம் காய்ந்து கொடுக்க எனுங் துணை மாற்ற மேகவின் ருன்தடு மாற்றத்துத் தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றின்ை. (2) (குண்டலகேசி) ஒரு அரசனுடைய குன நிலைகளை இவை குறித்துள்ளன. அறங்கொள் கோல் அண்ணல் என்றது கரும நீதிகளை உரிமை யோடு கழுவியுள்ள செங்கோல் வேங்கன் என அவனுடைய நெறிமுறைகளை விளக்கி நின்றது. புண்ணியம் பொதிந்து வரும் அளவே ஆட்சி கண்ணியம் பொருங் தி வருகிறது. மன்னன் நெறியுடையன் ஆனல் மக்கள் யாவரும் திருந்தி வாழுவர்; வாழவே அந்த நாடு பெருங்தன்மை நிறைந்து பெரு வளங்கள் சுரங்க விளங்கும். தக்காரைப் பேணி என்றது தகுதி யுடைய பெரியோர்களை மிகுதியும் பேணி ஒழுகி வர வேண்டும் என்றவாறு. அறிவு சீலம் ஆற்றல்களில் சிறந்த மேலோர்களை உரிமையாத் தழுவி ஒழுகிவரின் அங்க அரசு எவ்வழியும் விழுமிய கிலையில் விளங்கி மேலான மகிமைகள் நிறைந்து வரும் என்க. தக்கார் இனத்தய்ைத் தான் ஒழுக வல்லானேச் செற்ருர் செயக்கிடந்த தில். (குறள, 446) தக்க பெரியோர்களை உறவா. அனைத்து ஒழுகவல்ல அரசன் யாண்டும் வெற்றியுடையனப் மிக்க மேன்மைகளை அடைந்து வருவன் எனத் தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். வி ரி ங் த நிலமண்டலத்தை ஆள நேர்ந்த அரசனுக்கு எதிரிகள் நேர்வது இயல்பு ஆதலால் அந்தப் ப ைக வ ர் அடங்கி ஒடுங்கும்படி உயர்ந்த மேதைகளைத் துணையாக் கொண்டு அவன் வாழ வேண் டும். மதிமாண்புடைய நல்லோர்களை இனமாத் தழுவி ஒழுகின் அந்த ஆட்சி அதிமாண்புடையதாய் உயர்ந்து வழி முறையே ஒளி செய்து வரும். இனிய சார்புகள் எவ்வழியும் இன்பம் தரு தலால் அவை திவ்விய அமுதங்களாய்ச் சிறந்து திகழ்கின்றன. சேர்ந்தவர் தன்மையாய்ச் செறிந்து மன்பதை சார்ந்துநேர் வருதலால் தகுதி யாளரை ஒர்ந்து உரிமையா உவந்து கொள்ளுக ஆர்ந்தபே ராசினி தமையும் யாவுமே. இது இங்கே தேர்ந்து தெளிய வுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/91&oldid=1327471" இலிருந்து மீள்விக்கப்பட்டது