பக்கம்:தரும தீபிகை 6.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பதாம் அதிகாரம். co Ti மா ட் சி அஃதாவது உயர்ந்த குண மாண்புகளின் நிலைமை. ஆட்சி புரிய நேர்ந்த அரசன் அரிய இனிய மாட்சிகளோடு மருவி யிருக்க வேண்டும் எ ன உணர்த்துகின்றமையால் அதன் பின் இது வைக்கப்பட்டது. அரச நீர்மைகள் கேரே அறிய வந்தன. 79.1 மாந்த்ர் தமைப்பேணி மாநிலத்தைக் காத்தருளும் வேந்தர்க் குயர்குணங்கள் வேண்டுமே-கேர்ந்துள்ள சீர்மை மரபில் செனித்து வரினுமே ர்ேமை அளவே கிலே. (க) இ-ள். மனித சமுதாயக்கை இனிது பேணி உலகத்தைப் ப து காக்க நேர்ந்த அரசர் உயர்க்க குண நலங்களுடையராப்ச் சிறந் திருக்க வேண்டும்; பெரிய அரச குடியில் பிறக்கிருந்தாலும் இனிய நீர்மை அளவே மகிமைகள் மருவி வரும் என் க. குண நலமே உ யர்நிலை என இது உணர்த்துகின்றது. உலகில் கானும் உயிரினங்களுள் மனித மரபு உயர்ந்து நிற்கிறது. ஒர்ந்து உணரும் திறம் கன்கு அமைந்திருத்தலால் மனிதன் எங்கும் உயர்ந்தவன ய்ச் சிறந்து திகழ்கின்ருன். இந்த மனிதக் கூட்டத்துக்குக் கலைமை அதிபதியாய் நேர்க்கவன் அரசன் என வந்தான். மாக்கர் வணங்கி வாழ்த்த மகிமை கோய்ந்து வந்துள்ளபை யால் வேந்தன் யாண்டும் வியனிலையா ளனப் விளங்கி நின்ருன். சிறப்பு நிலை பிறப்புரிமையாய் வக் துள்ளது. சிறந்த குடிப்பிறப்புக்கு உரிய குண நலங்கள் நன்கு அமைக்க போது கான் அக்க அரசன் உயர்ந்த கோமகன ப் ஒளி பெற்று நிற்கின்ருன். இனிய இயல்பு அரிய உயர்வாகின்றது. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நானும் ஒருங்கு. (குறள், 951) செம்மையும் கானமும் சீரிய குடியில் பிறக்காரிடம் இயல் பாக அமைந்துள்ள நீர்மைகளாம் எனத் தேவர் இவ்வாறு குறித்துள்ளார். மேன்மையான நல்ல குடிப்பிறப்பிற்கு உரிய பான்மைகளை இது நன்கு வரைந்து காட்டி விளக்கியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/95&oldid=1327475" இலிருந்து மீள்விக்கப்பட்டது