பக்கம்:தரும தீபிகை 6.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2020 த ரும தீ பி. கை ஒன்றிய நண்பும் ஊக்கமும் முயற்சியும் ஒழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா அமைச்சின் அமைதியும் அளியும் அறனும் சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த ஆற்றலும் வெங்கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும் செருக்கிச் செல்லும் செலவினன்.” (பெருங்கதை) உதயன மன்னனுடைய குண மாண்புகள் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. இனிய பான்மைகள் அரிய மேன்மைகள் ஆகின்றன. மனத்தால் மலர் மாண்புறுகிறது; குணத்தால் மனிதன் மகிமை புறுகிருன். மனித சமுதாயத்தை இனித பேண வந்த அரசன் குணங்களால் உயர்ந்த அளவு கோமுறையில்சிறந்து திகழ்கிருன். சக்தியம் கருணை நேர்மை முதலிய உத்கம நீர்மைகள் உயர்ந்த ஆத்தும சக்திகளாய் ஒளி புரிந்துள்ளன. இத்தகைய குண நலங்களை மருவிவருபவர் அரிய பெரியராப் அற்புதங்களைச் செய்கின்றனர். தேவர் முதல் யாவரும் குணம் மருவிய வழியே மனம் பெருகி மகிமை மாண்புகள் ஓங்கி வருகின்றனர். உருளு கேமியும் ஒண்கவர் எஃகமும் மருளில் வாணியும் வல்லவர் மூவர்க்கும் தெருளும் நல்லற மும்மனச் செம்மையும் அருளும் நீத்தபின் ஆவதுண்டாகுமோ? (இராமாயணம்) இதன் பொருள் நிலைகளை ஊன்றி உணர வேண்டும். அரச தருமங்களைப் போதித்து வரும்போது இராமனை நோக்கி வசிட் டர் இவ்வாறு கூறியிருக்கிருர், திருமால் சிவன் பிரமா மூவரும் தேவதேவர்கள். சீவ கோடிகளைக் காத்தல் அழித்தல் படைத் கல்களைச் செய்து வருகின்றனர். முதல்வராயுள்ள அவரும் தரும நீதிகளைக் கழுவி நின்றே தம் கருமங்களைப் புரிகின்றனர். அறம், மனச்செம்மை, அருள் இம் மூன்றும் அம் மூர்த்திகளுக்கு ஊன்று கோல்களாயுள்ளன. இக் குண நீர்மைகளைச் சிறிது நீங் கினும் அவர் வலியிழந்து பெரிதும் பிழைபட நேர்வர் என முனி வர் மொழிந்துள்ளது நுணுகி உணர்ந்து கொள்ள வுரியது. நல்ல குணங்களிளுலேதான் கடவுளும் வல்லவராய் நிலைத்து மகிமையாகிற்கிருர், இக்க உண்மையை ஒர்ந்து மனிதன் குணவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/97&oldid=1327477" இலிருந்து மீள்விக்கப்பட்டது