பக்கம்:தரும தீபிகை 6.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2022 த ரு ம தி பி ைக சதகயை திறகனருன. சததன, சுததன என பன சகதியவானுக குப் பெயர்களாய் வந்துள்ளன. உடம்பு நீரால் சுத்தம் ஆதல் போல் உள் ளம் சத்தியத்தால் சுக்கம் ஆகிறது. நீராலன்றிவே று யாதாலும் உடல் சுத்தம் ஆகாது; சத்தியத்தா லன்றி மனித உள்ளம் புனிதமாகாது. அகத்து ப்மை அதிசய மகிமையாம். புறம்துாய்மை நீரான் அமையும்; அகந்துாய்மை வாய்மையால் காணப் படும். (குறள், 298) அகத்தை வாய்மையால் தாய்மை செய்யுங்கள் என அறு மனித சமுதாயத்துக்குத் தேவர் இவ்வாறு போதித் திருக்கிரு.ர். மனம் புனிதமான போது மனிதன் மகான ப் விளங்குகிருன். சக்தியம் சித்தத்தைத் சுத்தி செய்கிறது; அந்தச் சித்த சுக்தி அதிசய சக்திகளாப் அரிய சித்திகளைச் செய்கிறது. உள்ளத்தில் மாசு நீங்க உயிர் தேசு உறுகிறது; உறவே அந்த மனிதனிடம் அரிய ஆற்றல்கள் பெருகிப்பெரிய மகிமைகள் மருவிவருகின்றன. My strength is as the strength of ten, Because my heart is pure. (Tenneyson 'என் உள்ளம் சுத்தமாயிருத்தலால் எனது பலம் அதிக வலியடைந்துள்ளது' என ஆங்கிலக் கவிஞராகிய டென்னிசன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இது இங்கே நன்கு அறிய வுரியது. உண்மை உள்ளத்தைப் புனிதமாக்கி உயர்ந்த திண்மையை அருளி மனிதனைப் புனிதமான ஒரு தெய்வமாக் திகழச் செய்கி றது; செய்யவே வையமாங்கர் எவரினும் மெய்யன் மேலானவ குய் விளங்கி யாண்டும் மகிமையோடு நீண்டு நிற்கின்றன். “A devotee of Truth may not do anything in deference to con Vention.” 'சத்தியத்தை உரிமையோடு பேணி வருகிறவன் யாவருக் கும் அடங்கி ஏதும் செய்ய வேண்டியதில்லை’ எனக் காந்தியடி கள் இவ்வாறு உண்மையின் உயர்வை நன்கு குறித்திருக்கிரு.ர். உள்ளத்தில் உண்மை யுடையவன் எவ்வழியும் பாதும் பிழையிலனப் விழுமிய நிலையில் விளங்கி நிற்பன், திண்மையும் தேசும் அவனிடம் செழித்து ஒங்கும்; தன் கடமைகளைக் கருதி யுணர்ந்து உயிர்களை உரிமையோடு பேணி அருளுவான்; அருள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/99&oldid=1327479" இலிருந்து மீள்விக்கப்பட்டது