பக்கம்:தரும தீபிகை 7.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2413 பாய்ந்து பயிர்களுக்கு உதவுதல்போல் மேலோர் விதிமுறையே உயிர்களுக்கு உதவுகின்றனர். உறவினர் அயலினர் பெரியவர் சிறியவர் உயர்ந்தவர் இழிந்தவர் என்று வேறுபாடுகள் யாதும் காணுமல் எவ்வுயிரையும் போருளோடு .ே ப ணி வருபவனே திவ்விய நிலையை நேரே காணியாக் காணுகிருன். உடலுறுப் புகள்மேல் கீழ்என்று உன்னிடாது ஒம்பல்போஅலும் தடமலே கொண்ட நீரைத் தாழ்தரைக்கு அளித்தல் போலும் தொடர்புறு மேலோர் தங்கைத் தோய்கிதியாவும் தாழ்ந்தோர்க்கு இடஎனக் கடவுள் ஈந்தான் எனகினேங் திடுவர்மாதோ. (நீதி நூல்) இதனை ஈண்டு நினைந்து நீதிகளைத் தெளிந்து கொள்ள வேண்டும். பிற உயிர்களுக்கு இகமாய் உதவி செப்து வரும் அளவே ஒருவனுடைய வ ா ழ் வு புண்ணியம் உடையதாய்ப் பொலி வடைந்து வருகிறது. ஆன்மாக்கள் பரமான்மாவின் உறவினங் கள் ஆதலால் சீவகோடிகளுக்கு இதம் புரிபவனைத் தேவதேவன் விழைந்து நோக்கி உவந்து தழுவிக் கொள்கிருன். உள்ளம் இரங்கி உதவி வருந்தோறும் அவ்வுயிர் உயர்ந்த பரம நீர்மையை மருவி மிளிர்கிறது. தண்ணளியுள் புண்ணியம் விளைகிறது. 'அருளும் அன்பும் ஆருயிர் ஒம்பும் ஒருபெரும் பூட்கையும ஒழியா நோன்பின் பகவன்.” (மணிமேகலை, 3) புத்தாது நீர்மையை இவ்வாறு ஒரு தவ மகள் குறித்திருக் கிருள். உலக மக்களுடைய அவல நிலைகளைக் கண்டு கவலை கொண்டு இரங்கி அத்துன்பங்களை நீக்கும் பொருட்டே தமது இன்ப நிலையமான அரச வாழ்வை அடியோடு துறந்து அடவி புகுந்து அ ரு ங் த வ ம் புரிந்த பெருக்ககை ஆதலால் இவரது சீவதயையை வியந்து ஞாலம் முழுவதும் சாலவும் புகழ்ந்து போற்றுகிறது. ஆருயிர்க்கு அருளுவது அதிசய நீர்மையாம். தன்னுயிர் ஒம்பாது தண்ணளி நிறைந்து மன்னுயிர் ஒம்பிய மாதவன். - என மகிமை பெற்றிருக்கலால் இவருடைய நீர்மை சீர்மை களை நேரே தெரிந்து நெஞ்சம் வியந்து கொள்ளுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/104&oldid=1327065" இலிருந்து மீள்விக்கப்பட்டது