பக்கம்:தரும தீபிகை 7.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2414 த ரும பிேகை சிறந்த மனிதப் பிறவியை அடைந்தது உயர்ந்த கதிகளே அடைந்து கொள்ளவேயாம்; அறிவும் அன்பும் பரிவும் பண்பும் அதிசய நலங்களை அருளுகின்றன. இந்த இனிய இயல்புகள் மருவியபொழுது மனிதன் புனிதனய் உயர்ந்து தனி நிலையில் விளங்கி எ வ்வுயிர்க்கும் எவ்வழியும் இதமே செய்கிருன். உதவியாளனை உலகம் உவந்து கொழுகிறது; இதம் இல் லாதவனே எள்ளி இகழ்கின்றது. இனிய உதவியால் மனிதன் தனிமகிமைகளை அடைதலால் புனிதனுப்ப்பொலிந்து திகழ்கிருன். முனிவினும் கல்குவர் மூதறிஞர் உள்ளக் கனிவினும் நல்கார் கயவர்-கனிவிளேவில் காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து ஆயினும் ஆமோ அறை. (நன்னெறி, 28) உபகாரிகள் கயவர்; அஃது இல்லாதவர் கயவர் என இது காட்டியுளது. இனிய தீங்கனியும் எட்டியும் என்று சுட்டியது முறையே அவருடைய மேன்மை கீழ்மைகளை ஊன்றி உணர. சீவர்களுக்கு இரங்கி அருள்பவன் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கிருன்; அங்க இனிய நீர்மை இல்லையேல் மனித வாழ்வு இன்னததாப் இழிகின்றது; அவ்வாறு இழிவு கேராதபடி எவ் வழியும் உரிய வாழ்வைப் புனிதமாக்கி இனியனப் உயர்க. 916. பொய்காட்டி உள்ளம் புரைக்காட்டப் பூதலத்தில் மெய்காட்டி ஒர்மகன் மேவிகிற்றல்-கைகாட்டி மாமரம்போல் ஆமவன்ருன் மக்கள் உருவமைந்த பாமரமென் ருேர்க பரிந்து. (சு) இ-ள். உள்ளம் புன்மையாய் உணர்வுகலம் இன்றி இவ்வுலகில் ஒருவன் ஓங்கி நிற்பது மனித உருவில் மருவியுள்ள நெடிய ஒரு கைகாட்டி மரத்தின் பாங்கேயாம் என்க. மனிதப் பிறவி பெறுதல் அரிது ஆயினும் அந்தப்பிறப்பை அடைந்து வந்துள்ள மக்கள் பலர் மாக்கள் போலவே இழிந்து உழல் கின்றனர். அறிவுகலம் குன்றி அவல நிலைகளில் அலேந்து கண்டதையே கண்டு உண்டதையே உண்டு வீணே வளர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/105&oldid=1327066" இலிருந்து மீள்விக்கப்பட்டது