பக்கம்:தரும தீபிகை 7.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இ ரு ப் பு 24.17 917. மண்ணுலகம் எல்லாம் வரைந்து தனிஅரசாய் விண்ணும் புகழ விளங்கினும்-உண்மையுடன் தன்னுயிர்க்குச் சேமம் தனியாகச் செய்திலனேல் என்ன பயனும் இலன். (எ) இ-ன். == ஒரு பெரிய அரசனப் இவ்வுலகம் முழுதும் ஆண்டாலும் தனது உயிர்க்கு இனிய உறுதிகலங்களை மருவிக் கொள்ள வில்லை யானுல் அப்பிறவியால் அவனுக்கு யாதொரு பயன்இல்லை என்க. மனித மரபுள் மன்னன் பெரியவன்; கருவிலேயே திரு வுடையவனப் உருவடைந்து வந்துள்ளவன்; உலகத்தை ஆளும் உரிமையை இயல்பாக மருவித் தலைமையான நிலையில் தழைத்து நிற்பவன்; அத்தகைய வேந்தனும் தன்பிறப்பின் பயனை உய்த்து உணர்ந்து உய்தி பெருனயின் அப்பிறவி ஊனம் உடையதாப் ஈனம் அடைகிறது. ஆன்மபலன் உறுவதே மேன்மைபெறுகிறது. ஒருவன் பெற்ற உயர்ந்த பிறப்புக்குச் சிறந்த பயன் பின்பு எந்த உடலிலும் பிறவாமல் செய்து கொள்ளுவதேயாம். எவ் வழியும் வெவ்விய துன்பங்களே நிறைந்துள்ளமையால் பிறவி நீக்கமே பேரின்பமாய் கின்றது. முத்தி என்னும் சொல் பிறவித் துயரிலிருந்து உயிர் விடுதலை பெறுவது என்னும் பொருளை யுடையது.அப்பேறே பேரானந்தமாம். முன்னம் செய்த புண்ணியத்தால் அரசனுப்ப் பிறக்கின் முன்; அந்தப் பிறவியில் நெறி வழுவாமல் நீதிமுறை புரிந்தால் மேலும் உயர்க்க வேந்தனப்ச் சிறந்து தோன்றுகின்ருன். சீவர்கள் புரிகிற கல்வினைகள் அவரை முறையே உயர்த்தித் தேவர்கள் ஆக்குமே அன்றிப் பிறவியை நீக்கா; புண்ணிய போகங்களை நுகர்ந்து முடிக்க பின் விண்ணவரும் வேறு பிறவி களே கண்ணுகின்றனர். பிறத்தலும் இறத்தலும் பிழைத்தலும் உழைத்தலும் விழித்தலும் உறங்கலும்போல் தொடர்ந்து நடந்து வருகின்றன. பிறவித் தொடர்புகள் பேராது படர்கின்றன. கற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளேதலும் மறப்பயன் விளேதலும் 303

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/108&oldid=1327069" இலிருந்து மீள்விக்கப்பட்டது