பக்கம்:தரும தீபிகை 7.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2419 சிறப்பு என்னும் செம்பொருள் காண்பதே அறிவு என மனிதனு டைய உயர்ந்த அறிவுக்குச் சிறந்த பலனைத் தேவர் இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிரு.ர். காட்சி கருதியுணரத் தக்கது. சரியான பயனே அடையாமல் சாக நேர்ந்தால் மீண்டும் பிறவிக் துயரங்களே அடைய நேரும் ஆதலால் பெற்ற பிறப்பு பெரும் பிழையாப் முடிகிறது. கன் உயிர்க்குச் சேமத்தைச் செய்துகொண்டவனது பிறப்பும் இருப்பும் பெரிய மகிமைகளை யுடையனவாய் அரிய கீர்த்திகளைப் பெறுகின்றன. வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன் வழிபோய்ப் பொருந்தேன் நரகில் புகுகின்றி லேன் புகழ் மாமருதில் பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச்சென்று இரவேன் ஒருவரை யாதொன்றுமே. (மருதுார்மும்மணி, 3) பட்டினத்தார் இருந்துள்ள கிலையை இங்ங்னம் குறித்திருக் கிரு.ர். சிவபெருமான் ஆகிய செங்கேனை வாரி உண்டு யாதொரு ஆசையுமின்றி யிருந்தமையால் பிறவி நீங்கிப் பேரின்ப நிலையை அடைந்துள்ளார். ஆன்ம அனுபவமான அவ்வுண்மை உரை களில் உணர வந்தது. அரிய பிறவி பெற்றபயன் தெரிய கின்றது. -o-, m 918. ஆடும் திரிகை அரைச்சுற் றடையுமுனே ஒடும் கினைவோ ஒருகோடி-கூடியஇம் மாய மனத்தை மருவி யுளவரையும் தீய துயரே தெளி. )عـy( இ-ள். ஆடுகிற கிரிகை அரைச் சுற்று வருமுன் ஒரு கோடி கினை வோடு ஓடிவருகிற மாய மனம் மருவியுள்ள வரையும் தீய துய ரங்கள் ஒழியா; அம்மாயம் ஒழியின் மகிமை விளையும் என்க. இராகிவரகு முதலிய தானியங்கக்ள அரைத்து மாவாக்கும் யந்திரத்துக்குத் திரிகை என்று பெயர். சுழன்று திரிந்து வருவது என்னும் காரணக் குறி அமைந்தது. அது அரை ச்சுற் று வரு முன்னரே மனிதனுடைய மனம் உலக முழுவதையும் பலமுறை சுற்றி அலகிலாத அடலோடு யாதும் சலியாது வந்து விடும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/110&oldid=1327071" இலிருந்து மீள்விக்கப்பட்டது