பக்கம்:தரும தீபிகை 7.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2421 மனசிலைகளைக் குறித்த மகான்கள் இவ்வாறு கருதியுள்ள னர். உருவக வகையில் மருவி வந்துள்ள பொருள் கிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். மானச மருமங்கள் அதி சய விளைவுகளாய்ப் பெருகி வினைகிலைகளை விளக்கியிருக்கின்றன. கடல்களைப் பருகிவிடலாம்; மலைகளை எடுத்து எறியலாம்; கனல்களை விழுங்கலாம்; வேறு எதையும் செய்து முடிக்கலாம் மனதை அடக்க முடியாது; இதனை அடக்கி ஒழித்தால் ஒழியப் பிறவித் துயரங்கள் ஒழியா; உயிர்க்கு உய்தியில்லை; ஒரு கதியும் கிடையாது எனக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. உலகப் பொருள்களே ஒயாது அவாவி, தேக போகங்களை வேகமா வி ைழ ங் த மோக மயக்கங்களில் நீண்டு மூண்டு வருவன எல்லாம் நீண்ட துன்பங்களுக்கே கிலேயான காரணங் கள நிலைத்து வருகின்றன. துக்கவிளைவுகெரியாது புரிகின்றனர். கூடிவந்த அரிய பிறவியால் அடையவுரிய பயனை யாதும் உணராமல் அயலே மயலாய் ஒடி அவல ஆசைகளை மனம் விளைத்து வருதலால் துறவிகளும் கவசிகளும் ஞானிகளும் அதனேடு மாருப் பாண்டும் மூண்டு போராடி வருகின்றனர். இமையளவு போதைஒரு கற்பகா லம்பண்ணும் இவ்வுலகம் எவ்வுலகமோ என்றுஎண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ வான்னில் மக மேருவாக்கிச் சுமை எடுமின் என்றுதான் சும்மாடு மாய் எமைச் சுமையாளும் ஆக்கி நாளும் துற்புத்தி பண்ணியுள கற்புத்தி யாவையும் சூறையிட்டு இங்கிரசாலம் அமையஒரு கடத்தும் சமைந்தாடும் மனமாயை . . . அம்மம்ம வெல்லல் எளிதோ? மனத்தின் மாயசாலங்களே விளக்கித் தாயுமானவர் இவ்வாறு மறுகியிருக்கிரு.ர். புலன்களே அடக்கிப் புனித நிலையில் பரமான் மாவை மருவி மகிழ்ந்த இராசயோ கி ஆகலால் இடை யிடையே மனம் சலனம் அடையும் பொழுது அதனேடு இகமா வாதாடி யுள்ளார். அந்த வுண்மையை அவருடைய வாய்மொழிகள் தெளிவாக்கி யுள்ளன. மனமாயை என்றது நினைவுற வுரியது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/112&oldid=1327073" இலிருந்து மீள்விக்கப்பட்டது