பக்கம்:தரும தீபிகை 7.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2426 கரும பிேகை இயல்பாகவே மனதளிடம் நல்ல அறிவு அமைந்துள்ளது; இருந்தும் அதன் பயனே அடையாமல் மயலாய் இழிந்து கழிவ தே மாயமயக்கமாய் பாண்டும் மருவி வருகிறது. பல நூல்களைப் படிக்கின்ருர்;கலைகளைக்கற்கின்ருர்;காவியங்களை உணர்கின்ருர்; உலகநிலைகளை அறிகின்ருர், வானமண்டலங்களே ஆராய்கின்ருர்; கிரக சஞ்சாரங்களைத் தெரிகின்ருர்; இன்னவாறு யாவும் ஆவ லோடு தெரிய நேர்ந்தவர் தன்னக் குறித்து யாதும் தெரியாமல் அவலமாய் அழிந்து ஒழிகின்ருர் மதிகேடராய் இழிந்து கழிந்து ஒழிந்து போவது அதிசய விைேதமாய் விரிந்து கிற்கிறது. சாவு யாவருக்கும் கலைமேல் இருக்கிறது; அது சேருமுன் நேர்ந்த பிறவிக்கு ஆர்க்க பயனே ஒர்ந்து உணர்ந்து ஏதேனும் ஒரளவு உறுதிநலம் அடைந்தவனே உத்தமன உயர்கின்ருன்; அல்லாதவர் எல்லாரும் பித்தராகவே இழிந்துபடுகின்ருர். துன்பத் தொடர்புகள் தொலைந்து இன்பப் பேறுகள் எய்தும்படி வாழ்வதே வாழ்வாம்; அவ்வாறு வாழ்பவனைத் தேவர் முதல் யாவரும் புகழ்ந்து வருகின்ருர். உத்தம மனிதனு டைய வாழ்நாளைக் குறித்துப் புத்தர் ஒருமுறை ேப தி த் த போதனை வித்தக ஞானமாய் விளங்கிக் கத்துவ நீர்மையைத் துலக்கி கின்றது. அந்தக் காலத்தில் வழங்கி வக்க பாலி மொழி யில் அது எழுதப்பட்டுள்ளது. அயலே வருவது காண்க. யோச வஸ்ஸஸ்தம் ஜீவே அபஸ்ளலம் அமதம் பதம் ஏகாஹம் ஜீவிதம் லேய்யோ பஸ்ஸ்தோ அமதம்பதம். (தம்மபதம், 114) அமுத பதத்தை அறியாமல் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதினும் அதனை அறிக் து ஒரு நாள் வாழ்வதே உயர்வுடை யது என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. என்றும் அழியாத பேரின்ப நிலையையே அமுதபதம் என்று இங்கே குறித்திருக்கிருர். இரண்டாயிரத்த ஐக் நூறு ஆண்டு களுக்கு முன்னர் ஒரு மகான் உரைக்கதை இன்றும் அறிவுலகம் உரிமையோடு கருதி வருகிறது. பொய்யான மாய வாழ்வில் மெய்யான உண்மையை உணர்த்து கொள்வது மேலான கதியை அருளும் ஆகலால் அது மேன்மையான தாய மந்திர மா எண்ண சேர்ந்தது. உயிர்க்கு உய்தி புரிவது ஒளி மிகுந்த வாழ்வா உயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/117&oldid=1327078" இலிருந்து மீள்விக்கப்பட்டது