பக்கம்:தரும தீபிகை 7.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாற்றுமூன்ரும் அதிகாரம் இ ற ப் பு . அஃதாவது பிறந்து வாழ்ந்து வந்த மாந்தர் இறந்தபோகும் கிலே. பிறப்பும் இருப்பும் இறப்பை நோக்கி வருதலால் இ.அறுதி நேருமுன் உறுதிகலனை உணரும்படி இது ஈ ண்டுவைக்கப்பட்டது. 931 பிறப்பும் இறப்பும் பிரியாமல் என்றும் மறப்பின்றி மாறி வரலால்-வறப்பின்றி வையம் வழங்கி வருமால் வரவுநிலை உய்ய அருளும் உணர்வு. (க) இ-ள். சீவர்களுடைய பிறப்பு இறப்புகளே மருவி இந்த உலகம் என்றும் குன்ருமல் வளமாய் இயங்கி வருகிறது; அக்க வரவில் அரிய உறுதி நலங்களை அறிவு தெளிவா அருளியுள்ளது என்க. உலகில் தோன்றுகின்ற உருவக் கோற்றங்கள் சிலகாலம் நிலவியிருந்து பின்பு மறைந்து போகின்றன. அவ்வாறு மறைவ தையே இறப்பு என்று காம் குறித்து வருகிருேம். அறுதியா ப் இறுதியு.றவது இறப்பு என வந்தது. பிறந்த எதுவும் இறந்து படுவது முடிக்க முடிவாய் கின்றது. பிறப்பும் இறப்பும் விழிப்பும் உறக்கமும்போல் இயல்பாய் இணைந்து எவ்வழியும் தொடர்ந்த பிணைந்தள்ளன. பகல் இரவு, நினைப்பு மறப்பு, விழிப்பு உறக்கம் எனப் பிறப்பு இறப்புகள் பிரியா இரட்டைகளாப் மருவியிருக்கின்றன. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (குறள், 339) பிறப்பு இறப்புகளைக் குறித்துத் தேவர் இவ்வாறு விளக்கி யிருக்கிருர். உறங்கலும் விழித்தலும் மனித வாழ்வில் நாள் தோறும் தொடர்ந்த கடந்து வருகின்றன. தெளிவான அந்த அனுபவ கி லே க ளே ஒப்புக்காட்டி இறத்தல் பிறத்தல்களின் தொடர்புகளே நயமாக் தலக்கி யருளினர். உறங்குதல் சாதஆல யும் விழித்தல் பிறத் தலையும் முறையே உணர்த்தியுள்ளது; இந்த உண்மையை உணர்ந்து உயிர்க்கு நன்மையைச் செய்து கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/120&oldid=1327081" இலிருந்து மீள்விக்கப்பட்டது