பக்கம்:தரும தீபிகை 7.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2430 த ரு ம தீ பி. கை ளுக; கொண்டால் விழிப்பதுபோல் மீண்டும் பிறக்கின்ற உயிர் செழிப்பாய்ச் சிறந்து வரும் என்பது கெரிய வந்தது. பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது. (மணிமேகலை, 16) சாதுவன் என்னும் அறிஞன் சாகல் பிறத்தலை இங்ங்னம் ஆதரவான போதனையோடு குறித்திருக்கிருன். இயல்பாக மாறி மாறி நிகழும் என்பதை உவமானம் தெளிவாக்கி கின்றது. To die: to sleep; no more. (Hamlet 3, I) சாவது ஒருவகை உறக்கமே என இதுவும் குறித்துள்ளது. இழித்தக்க செய்து ஒருவன் ஆா வுணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவருே? விழித்திமைக்கு மாத்திரை அன்ருே ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. (நாலடி, 802) கண்மூடிக் கண் திறப்பது போல் இறப்பும் பி ற ப் பு ம் விரைந்து நிகழ்கின்றன; அழிவுடைய இந்த வாழ்வில் இழிவான காரியங்களைச் செய்யாமல் நல்ல மானத்தோடு வாழவேண்டும் என மதிநலங்களைத் தலக்கி இது இங்கனம் உணர்த்தியுள்ளது. சாவை நூலோர் நினைவுறுத்துவது தனது வாழ்வை மனிதன் சால்போடு நன்கு நடத்த வேண்டும் என்று கருதியேயாம். துறக்கமே முதல வாய அாயன யாவை ஏனும் மறக்குமா கினேயல் அம்மா வரம்பில தோற்று மாக்கள் இறக்குமாறு இது என்பான்போல் முன்னேகாள் இறந்தான் பின்னுள் பிறக்குமாறு இதுஎன்பான்போல் பிறந்தனன் பிறவா வெய்யோன். (இராமா, கங்கை, 49) சூரியன் மறைந்து பின்பு உதயமான நிலையைக் கவி இங்ங் னம் வரைக்க காட்டியிருக்கிருர். பிறந்தவன் எவனும் இறந்து போவன்; அவ்வாறு இறக்கு முன் உயிர்க்கு உயர்ந்த உறுதி நலனே அடைந்த கொள்ளுக āT G.hг மாங்கர்க்கு அறிவு போதிக்கும் பொருட்டு முதல் நாள் இறந்தது போல் மறைந்து மறுநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/121&oldid=1327082" இலிருந்து மீள்விக்கப்பட்டது