பக்கம்:தரும தீபிகை 7.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இ ற ப் பு 2431 பிறந்ததுபோல் ஆதவன் தோன்றினன் என்னும் இது ஈண்டு மான்றி உணர வுரியது. கதி கிலே காணக் கதிரவன் காட்டினன். பகலும் இரவும் போல் பிறப்பும் இறப்பும் இயல்பாப் க் தொடர்ந்து நிகழ்ந்து வரும் என்பதை இதல்ை அறிந்து கொள் வருகிருேம். நல்லது தீயது என்னும் இருவகை வினைகளைச் வேர் கள் செய்துவருதலால் அவற்றின் பயன்களான இன்ப துன்பங் முறையே அனுபவிக்க வருகின்றனர். அவ்வரவில் பிறத்த லும் இறத்தலும் பிறழாமல் பெருகித் தொடர்கின்றன. இருவினே இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்திறங் து வருவது போவ தாகும் மன்னிய வினேப்பலன்கள் தரும் அரன் தானி யோடு தராபதி போலத் தாமே மருவிடா வடிவும் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே. (சிவஞானசித்தியார்) சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தின் ஆகும் ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட்கு இயல்புகண்டாய்! நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர்வு இன்மை யன்றே பேதை பெரிதும் பொல்லாய் பெய்வளைத் கோளி என்ருன். - (சீவகசிந்தாமணி 269) இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும் பாண்டும் திறத்துளி நோக்கின் செய்த வினே தரத் தெரிந்த வன்றே புறத்தினி உரைப்பது என்னே பூவின்மேல் புனிதற் கேனும் அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி என்ப. (இராமாயணம், கிட்கிங், அரசியல் 85) விதலும் பிழைத்தல் தானும் விதிவழி அன்றி நம்மால் ஆதலும் அழிவும் உண்டோ கின்னில்வேறு அறிஞர் உண்டோ? பூகலம் தன்னில் யாவர் புதல்வரோடு இறந்தார் ஐயா! சாதலிங்கு இயற்கை அன்றென்று அருளுடன் தடுத்த காலே. (பாரதம், 13-151) பிறந்த ஆகம் ஒன்று இறங் கிடாப் பெருமையும் உடைத்தோ எறிந்த வான்சிலே வீழ்ந்திடாது இருப்பது இங்கில்லை; செறிந்த காரியம் என்பது என் ருயினும் சிதையும் இறங் கிடாதுகா ரணம் எனப் படுமதே என்றும். (பிரபுலிங்கலீலை சூழ்ந்தன எல்லாம் பிரியும் தோன்றினஎல்லாம் நசிக்கும் காழ்ங் கிடுமற்று உயர்ந்த வெல்லாம் கனிநகரும் மாளிகையும் 1ாழ்ந்துடவைப் படும் அனுமான் பழுத்த பழம் தனக்கு என்றும் வீழ்ங்கிடலே கதிஆல்ை விளியாதே சரீரம்தான்.(சேதுபுராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/122&oldid=1327083" இலிருந்து மீள்விக்கப்பட்டது