பக்கம்:தரும தீபிகை 7.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2438 தரும பிேகை மூப்பும் நோயும் மூண்டு சாக நேர்ந்துள்ளாய்; தேக போகங்களில் மோகமா யிழிந்து போகாமல் தத்துவ நிலைகளை உய்த்துணர்ந்து முத்தி நலம் பெறுக என இது புத்தி போதித் துள்ளது. உடல் விழுமுன் உயிர்க்கு உறுதிகாண உணர்த்தியது. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்; கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே. (திருமந்திரம்) நீ செத்தால் உன் மனைவி மக்கள் யாரும் உன்னேடு கூட வரமாட்டார்; உனது தருமமும் தவமும் ஞானமுமே கூட வரும்; ஆதலால் அவற்றையே உரிமையா டி த் தேடிக் கொள்க என்று திருமூலர் இவ்வாறு மனிதனுக்கு மதிநலம் கூறி யிருக்கிருர். உடம்பைப் பழங்கூரையாக் குறித் த து அது விழுந்து ஒழியும் அவதி தெரிந்து விரைந்து கதிபெற வந்தது. ஒருவனுக்கு அமைந்த ஆயுள் நாள் கணக்தோறும் கழிந்து போகிறது; அதனை உணர்ந்த அவன் உய்தி பெற வேண்டும்; உள்ளம் புனிதமாய் நல்ல வழியில் ஒழுகினல் அவன் தருமவான் ஆகிருன்; ஆகவே இருமையும் அவனுக்கு உரிமையாய் இன்பம் தருகின்றன. அறமே ஆவிக்கு இனிய துணையாம். ஆற்றிய அறம் ஒன்றே ஆருயிர்க்கு என்றும் போற்றிய நலங்களைப் பொருந்தச் செய்தலால் ஏற்றிய வலி என இருமை இன்பெனத் தேற்றிய அமுதெனத் தெரிய நின்றதே. இதனை இங்கே நன்கு தெரிந்து நன்மை யு.டி.க. தான் செய்த புண்ணியமே எண்ணியபடி யெல்லாம் மனித லுக்கு இன்ப கலங்களை அருளி வருகின்றது என்று புத்தர் ஒரு முறை திரளான சனங்களுக்குப் போதித்தருளினர். அன்று அவர் பாலி மொழியில் கூறியதை உலக மொழிகள் பலவும் உவந்து போற்றி வியந்து புகழ்ந்து விழைந்து வருகின்றன. அந்த மூல மொழி அயலே காண வருகிறது. தி ாரே ஸ்-சரிதம் கதம் துச்சரிதம் சரே - தம... . ஸ்-கம் ஸ்ேதி அஸ்மிம் லோகே பரம்ஹிச. [தம்மபதம், 169)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/129&oldid=1327090" இலிருந்து மீள்விக்கப்பட்டது