பக்கம்:தரும தீபிகை 7.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 2451 கினேப்பினும் கடிதே இளமை க்ேகம்; அதனினும் கடிதே மூப்பின் தொடர்ச்சி; அதனினும் கடிதே கதுமென மரணம்; வாணுள் பருகி உடம்பை வறிதாக்கி காணுள் பயின்ற கல் காக் கூற்றம் இனேய தன்மையது இதுவே இதனே எனது எனக் கருதி இதற்கு என்று தொடங்கிக் செய்தன. சிலவே, செய்வன சிலவே; செய்யா நிற்பன சிலவே, அவற்றிடை நன்று என்ப சிலவே; இது என்ப சிலவே; ஒன்றினும் படாதன. சிலவே என்றிவை கணத்திடை கினேந்து களிப்பவும் கலுழ்பவும் கணக்கில் கோடித் தொகுதி. (கோயில் நான்மணி) இளமை மூப்பு மரணம் முதலிய நிலைகளைக் குறித்துக் காட்டி மனித வாழ்வைப் பட்டினத்தார் இப்படி நயமா விளக்கி யிருக்கிருர். நாளும் எமன் வாய்க்குள் இரையாய்க் கழிகின்ற னிகன் தனது அழிவு நிலையை உணர்ந்த அழியாக முழு முதல் பரமனைக் கருதி உருகி உய்ய வேண்டும் என உரிமையோடு போதித்துளார். போதனையில் வினைகளின் வேதனைகள் விளங்கின. சாவை எதிர் அறிந்து வாழ்வைப் புனிதமாக்கிப் புண்ணிய சிலராப் வாழவேண்டும் என்றே மேலோர் எண்ணி நடந்து இயம்பி யருளுகின்ருர், பெரியோருடை M_1 வாப்மொழிகள் இனிய அனுபவங்கள் தோப்ந்து தனியே காண வருதலால் மனித சமுதாயத்துக்கு அவை நன்மை புரிந்து வருகின்றன. He who should teach men to die, would, at the same time, teach them to live. [Montaigne] மரணத்தைக் குறித்து மனிதருக்கு உணர்த்துகிறவன் அதே சமையத்தில் நன்கு வாழவும் போதிக்கிருன் என்னும் இது இங்கு அறிய வுரியது. நெறியே வாழின் சாவு நேரே காழுகிறது. உடல் அழியுமுன் உயிர்க்கு உறுதி நலனை அடைபவனே மதிமான்; அவ்வாறு அடையாகவன் மடையணுகவும் கடைய ஞகவும் இழிந்து கதி இழந்து போகிருன். உற்ற உடல் ஒழியு முன்னே உயிர்க்குறுதி பற்றி உயர்க பரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/142&oldid=1327103" இலிருந்து மீள்விக்கப்பட்டது