பக்கம்:தரும தீபிகை 7.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2452 த ரு ம த ப ைக ஆன்ம கலம் ஆனந்த நிலையமாம். 928. பிறப்புடனே கூடப் பிறந்து பிரியா இறப்பும் இருக்கும் இயல்பால்-அறப்பயனே முன்கை ஒர்ந்து முடிக்க முடிவின்கண் -- என்னுைம் இல்லே இடம். )عـy( இ-ள். பிறந்து வருதலும் இறந்து மறைதலும் என்றும் பிரியாக உறவுகளாய்த் தொடர்ந்து நிகழ்கின்றன; இறப்பு சேருமுன் பிறப்பின் பயனை விரைந்து பெறுக; பெருது நின்ருல் பெரிய துயராம்; உறுவதை உணர்ந்து உறுதிகலனை அடைந்து கொள்க. நீண்டகாலம் சுகமாய் வாழவேண்டும் என்றே யாண்டும் யாவரும் விரும்புகின்றனர்; அவ்வாறு அவாவிவரினும் மூண்ட வினை அளவே வாழ்வுகள் ஈண்டு நிகழ்ந்து வருகின்றன: வினைப் போகங்கள் முடிந்தால் தினைப் போதளவும் தேகங்கள் கில்லா. உடல்கள் நிலைத்துள்ள போதும் உணர வேண்டியதை உணரா மல் உயிர்க்கு உறுதியை நாடாமல் உலகமையலிலேயே ஊனமா யுழன்று ஒரு பயனும் காணுமல் வறிதே மானுடங்கள் ஒழிக்க போகின்றன; அப் போக்குகள் பொல்லாப் புலைகளாயுள்ளன. செய்த வினேயளவே தேகங் களே எய்திப் பெய்த அளவே பெருகி---உய்தி பெறுவ தறியாமல் பிழைகளே காடி இஅறுவ துயிர்கள் இயல்பு. வேர்கள் தோன்றி வாழ்ந்து மாய்ந்த மறையும் கிலைகனை இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். பிறந்தவர் எவரும் இறந்துபடுவது விழி எதிரே தெளிவாய்த் தெரிந்திருக்தம் ஆன்ம கலனை அடையாமல் அவமே இழிந்து அவலமாஅழிக் த போவது அறியாமையின் செறிவாய் அடர்ந்து தொடர்ந்துள்ளது. செத்துச் சவம் ஆகுமுன் உத்தம மனிதன் ஒத்ததை உணர்ந்து உய்திபெற வேண்டும்; இறப்பு நேர்ந்த பின் யாரும் யாதும் செய்ய முடியாது. ஆதலால் அது நேரு முன்னரே சீர் செய்க. மகத நாட்டில் ம | ல தி என்று ஒரு மாது இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/143&oldid=1327104" இலிருந்து மீள்விக்கப்பட்டது