பக்கம்:தரும தீபிகை 7.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2460 த ரும தி பி கை உண்டுகொல் இதுவலது உதவி நீ செய்வது எண்தகு குணத்திய்ை தாதை என்றலால் புண்டரி கத்தனி முதற்கும் போக்கரு விண்டுவின் உலகிடை விளங்கி னைரோ. [6] ஐய யாதொன்றும் அவலிப்பாய் அலை உய்கிறம் அவற்கினி இதனின் ஊங்குண்டோ செய்வன வான்முறை திருத்திச் சேந்தநின் கையில்ை ஒழுக்குதி கடன்எலாம் என்ருன். [7] விண்ணுர்ே மொக்குளின் விளியும் யாக்கையை எண்ணிங் அழுங்குதல் இழுதைப் பாலதால் கண்ணினிர் உகுத்தலில் கண்டது இல்லே போய் மண்ணு சீர் உகுத்திதா மரைக்கையால் என்ருன். [8] (இராமாயணம்) இந்தப் பாசுரங்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. தெளிந்த ஞானசீலருடைய வாய்மொழிகளால் உயர்ந்த உண்மைகளைக் கவி இங்கே உலகம் அறிய வழங்கியிருக்கிருர். கவிகள் சுவைகள் சுரந்து வந்துள்ளன. பலமுறையும் கருதி நுகர வுரியன. உறுதி கலங்கள் உணர்வின் மணங்கள் தோய்ந்து ஒளிமிகுந்து நிற்கின் மன. போதனையில் பொதிந்துள்ள பொருள்கள் இருள் நீக்கி இன்பம் பயக்கும் இயல்புகளோடு உயர்ந்து திகழ்கின்றன. உடலோடு பிறந்த உயிர் மறைக்கே இரும்; அந்த இறப்பு சேருமுன் பிறப்பின் பயனைப் பெறின் உயிர் ஒளி மிகுந்து உயரும்; கருமமே உயிர்க்கு எவ்வழியும் உறுதித் துணை; துறவும் ஞானமும் சீவப் பறவைக்கு இரு சிறகுகள் போல் அமைக் துள்ளன; அவை மருவிய அளவு அது ம கி ைம யு.முகிறது; உன்னே மகன் ஆகப் பெற்ற பெருமையால் மன்னன் பரகதி அடைந்திருக்கிருன்; நீண்ட காலம் புகழோடு வாழ்ந்து கித்திய நிலையைப் பெற்றுள்ளமையால் நீ உள்ளம் உவந்து கொள்ள வேண்டும்; தேவதேவரும் காலத்தைக் கடந்து வாழமுடியாது; கங்கை இறந்த போனரே என்று சிங்கை வருந்தாதே; இந்த உலகில் எவரும் கிலேயாய் இருப்பதில்லை; இறத்தலும் பிறத்தலும் இயற்கை; இதனை மறந்து மறுகலாகாது; சிறந்த மேதையான நீ காதை பால் கொண்டுள்ள பாசத்தால் நெஞ்சம் உருகி நிலை குலைந்து அழுகிருப்; கண்ணிர் சொரிந்து அழுவதை நிறுத்தித் தந்தைக்குத் தண்ணிர் சொரிந்து கருமக் கடனை உரிமையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/151&oldid=1327112" இலிருந்து மீள்விக்கப்பட்டது