பக்கம்:தரும தீபிகை 7.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2462 த ரும பிே கை மண் கணல் ஆற, வான் புகைஆற, தாயர் இளைப்பு ஆற, அயன் களைப்பு ஆற, அடியேன் கால் ஆற ஐயா! கண்பார்! என்று ஐயாறனை நோக்கி ஐந்து ஆறுதல்களை வேண்டியிருக்கிருர். இதில் மருவியுள்ள சுவைகளே நுணுகி உணர்ந்து கொள்ள வேண்டும். எழுகடல் மணலே அளவிடின் அதிகம் எனது இடர்பிறவி அவதாரம்: இனியுனது அபயம் எனது உயிர் உடலும் இனியுடல் விடுக முடியாது; கழுகொடு நரியும் எரிபுவி மறலி கமலனும் மிகவும் அயர்வானர்; கடன் உனது அபயம் அடிமையுன் அடிமை கடுகிஉன் அடிகள் தருவாயே! (திருப்புகழ், 288) அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிரு.ர். அளவிடலரிய பிறவிகளே எடுத்து நான் செத்துச் செத்துச் சிதைந்திருக்கிறேன்; இனிமேல் என்னல் சாகமுடியாது; இறப்பை எவ்வழியும் யாதும் நான் காணுதபடி என் பிறப்பை அடியோடு நீக்கி உன் திருவடியில் சேர்த்துக் கொள் என்று உழுவலன்போடு உருகி அபயம் புகுந்திருக்கும் உறவுரிமை அவரது மனவுறுதியைத் தெளிவா விளக்கியுள்ளது. உடம்பை நீக்கிப் புனிதமான உயிரைத் தனி முதலோடு சேர்த்தலால் சாக்காடு மிகவும் இனியதே என முனிவரர் கருதி யுள்ளனர். சாவு அல்லல்களை ஒழித்தருளும் நல்ல துணை ஆயது. O death! We thank thee for the light that thou wilt shed upon our ignorance. [Bossuet] ஒ மரணமேl எமது மடமை இருள் மேல் ஒளியை விசி உதவியதற்காக உனக்கு நன்றி யறிவான வணக்கம் என இது குறித்திருக்கிறது. குறிப்பைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். Death and love are the two wings that bear the good man to heaven. (M. Angelo) நல்ல மனிதனைப் பரகதிக்குக் கொண்டு போகிற இரு சிறகுகளா மரணமும் அன்பும் மருவியுள்ளன என்னும் இது இங்கு அறிய வுரியது. இறப்பு இறவா இன்பத்தை அருளுகிறது. - பிறந்தவர் யாரும் இறந்து மறைதல் உறுதி; அந்த இறப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/153&oldid=1327114" இலிருந்து மீள்விக்கப்பட்டது