பக்கம்:தரும தீபிகை 7.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாற்று நாலாம் அதிகாரம் சி ற ப் பு அஃதாவது சீவன் அடைய உரிய சிறந்த கிலே. பிறந்த சினிதன் இறந்து படுமுன் விரைந்து பெறத்தக்க விழுமிய பேற் ”ம உணர்த்துகின்றது. ஆதலால் இது ஈண்டு வைக்கப்பட்டது. 9Տ 1. அரிய பிறப்பை அடைந்த மனிதன் உரிய சிறப்பை உணர்ந்து-பிரியமுடன் நாடி வரினே கலன்கள் அவனிடம் ஒடி வருமே உவந்து. (க) இ-ள். தான் அடைந்துள்ள மனிதப் பிறப்பு மிகவும் அருமையு * உயது; அரிய இந்த உடல் உள்ள பொழுதே அடைய வுரியதை '-sணர்ந்து ஒருவன் புனிதமா முயன்று வரின் இனிய பல நலன் *ள் எளிதே வந்து சேரும்; அந்த வரவு ஆனந்த நிலையம் என்க. பிறந்த பிறவிப் பயன் மிகவும் சிறந்தது; அதனை விரைந்து அெளிக்க விழைந்து புரிந்து கொள்வது உயர்ந்த நன்மையாம். பெற்றபொருளின் பெருமையைத் தெளிவா அறிந்தபோது கான் எவரும் அதனை உரிமையோடு பேண நேர்கின்ருர். வழி முறையே தொடர்ந்து வந்த இழிதுயரங்கள் யாவும் நீங்கி விழு மிய நிலையை அடைவதே அறிவுடைய பிறவிக்கு அமைந்த பய ஆம். துக்கங்களை ஒக்க நீக்க வல்ல பெருமை மக்கள் உருவில் உருவி யிருத்தலால் மனிதப் பிறவி மிகவும் அருமை என வந்தது. விலங்கு பறவை முதலாகத் தோன்றியுள்ள பிராணிகள் ைவற்றினும் மனிதமரபிடம் சிறந்த அறிவுகள் இயல்பாப் கிறைக் இருக்கின்றன; ஆகவே மானுடப் பிறப்பு பெறலரும் பேருய்ப் பெருமைமிகப் பெற்றது. அருமை பெருமைகள் எல்லாம் அறிவு ஆண்மைகளால் உரிமையோடு தெளிவாய் வெளி வருகின்றன. அரிய பல கிலைகளைக் கருதியுணரவும், உறுதியாயுணர்ந்ததை ஒழுங்காச் சொல்லவும், சொல்லிய வகைகளைச் சூழ்ந்த செய்ய ஆம் வல்லமை வாய்ந்திருத்தலால் மனிதன் எல்லாம் புரிய வல்ல வன் போல் எவ்வழியும் செவ்வையா இசைபெற்று கிற்கின்முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/157&oldid=1327118" இலிருந்து மீள்விக்கப்பட்டது