பக்கம்:தரும தீபிகை 7.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2467 உணர்ச்சி மிகுந்த உயர் பிறப்பை அடைந்தும் உண்மை கிலைகளை ஒர்ந்து தெளிந்து உப்தி பெருமல் புன்மைகளில் இழிந்து புலேயாப் உழலுதல் நிலையான மாயமயக்கமாய் நிலவி வருகிறது. அரிய பிறவிக்கு உரிய பயனை அறிபவன் பெரிய மகானப்ப் பேரின்பம் உறுகிருன்; அவ்வாறு அறியாதவன் அவகேடன யிழிந்து அவலமாய் அழிகின்ருன். நல்ல அறிவுடைய பிறப்பைப் பெற்றவன் அதைக் கொண்டு அல்லல்களை நீக்கிக் கொள்ள வில்லையானல் அத்தோற்றம் பழி படிந்து பாழ்படுகிறது. வீனப் பிறப்பாப் விளித்து போகாமல் விழுமிய சிறப்பை அடைந்து கொள்பவன் வித்தக முத்தனப் நன்கு விளங்கி நிற்கின்ருன். பேரளுர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் ஆரமிர்து அரிதில் பெற்ரும் அதன் பயன் கோடல் தேற்ரும்; ஒரும் ஐம்பொறியும் ஓம்பி உளபகல் கழிந்த பின்றைக் கூர்எரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த வெல்லாம் - (சீவகசிந்தாமணி. 877) மனிதப் பிறப்பு மதிநலம் உடையது; எல்லா இடும்பைகளையும் ஒருங்கே நீக்க வல்லது, அரிய அமுதம் போன்ற இவ்வுடம்பை பெரிய தவத்தால் பெற்றிருக்கிருேம்; பெற்றும் உரிய பயனை அடையாமல் பொறிநுகர்வுகளை அவாவி வெறிகொண்டு விணே திரிகிருேம்; செத்துச் சுடு காட்டில் உடல் வேகும் போது உயிர்க்கு ஏதேனும் பலன் உண்டா? துயர்க்கே வழிசெய்து அழிவது கொடிய பழியாம்; நெடிய மடமையாம் என இது குறித்துள்ளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவும். ஆர் அமிர்து அரிதில் பெற்ரும் என்ற த மனித தேகம் கிடைத்தற்கு அரிய மகிமை வாய்ந்தது என்பது தெரிய வந்தது. அரிய இனிய அமுது பெற்றவன் அதனை வறிதே இழந்து கழி வது பெரிய பரிதாபமாம்; ஆகவே தேகம் உள்ள பொழுதே தேகி திவ்விய நிலையை அடையும்படி செய்து கொள்ளுக. சிறந்த கருவி கரணங்கள் வாய்ந்து அறிவு நலங்கள் தோய்ந்து நெறிமுறைகள் அமைந்த பிறவியை அடைந்தும் கன் உயிர்க்கு உறுதி நலனை அடையாமல் ஒழியின் அந்த மனித வாழ்வு மாட்டு வாழ்வினும் கடையாய் இழிந்து படுகிறது. மேலான சிந்தனைகளை இழந்தவன் கீழான கிந்தனைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/158&oldid=1327119" இலிருந்து மீள்விக்கப்பட்டது