பக்கம்:தரும தீபிகை 7.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2469 932. பொன்றும் உடம்பு புகையாகு முன்னரே என்றும் அழியாத இன்பத்தை-நன்று கருதி அடைந்தான் கடுந்துயரம் எல்லாம் ஒருவி எழுந்தான் உயர்ந்து. (2-) இ-ள். இறந்துபடும் உடம்பு எ ரி ங் த புகை ஆகு முன்னமே என்றும் அழியாத சிறந்த நிலையை உணர்ந்து அடைக; அவ் வாறு அடையின் அல்லல் எல்லாம் நீங்கி உயர்ந்தாய் என்க. அழியும் புலயையும் அழியாக ஆனந்த நிலையையும் விழி தெரிய விளக்கி விழுமிய வழியை இது நன்கு துலக்கியுள்ளது. உடம்பு என்னும் சொல் உயிரோடு உடன்பிறந்து வந்தது என்னும் பொருளையுடையது; உடைந்து போகும் கிலேயது என் பதையும் இது உணர்த்தி கின்றது. உயிர்க்கு நிலையமாப் உரிமை தோய்ந்து ஒன்ருய் கின்றுவரினும் இடையே பிரிந்து அழிந்து போவது ஆதலால் பொன்றும் என ஒர் அடையை ஒன்றி வந்தது. உயிர் நீங்கிய உடனே உடல் சவம் ஆகிறது; சாவை அடைந்தது ஆதலால் சவம் என சேர்ந்தது. இது வெளியே கிடந்தால் அழுகி நாறி உயிரினங்களுக்குத் துயர்களை விளைக்கும்; அவ்வாறு விளையாதபடி இதனை மண்ணில் புதைத்து மறைக்கின் றனர்; அல்லது நெருப்பில் இட்டு எரித்து நீருக்கி விடுகின்றனர். பேரும் சீரும் பெருமையும் பெற்று ஆடையும் அணியும் சாக்தும் கோப்ந்து வாழ்ந்து வந்த உடல் நீறும் புகையுமாப் மாறி மறைகிறது. இந்த உடலுள் மருவி யிருந்த உயிர் எங்கே போயது? யாரும் யாதும் தெரிய முடியாத அதிசய மருமமாய் அ.தி அமைந்துள்ளது. வே இயக்கம் தெரிய அரிய நிலையில் மருவி வரினும் சீரிய சீவியம் தெய்வீகமாய்த் திகழ்கின்றது. உடலோடு கூடி வாழுங்கால் உயிர் சன்மைகள் புரிந்திருக் தால் முடிவில் இன்ப உலகத்தை அடைகிறது; தீமைகள் செய்திருந்தால் துன்ப நிலையங்களைச் சேர்கிறது; இரண்டும் கலக்கிருந்தால் இன்ப துன்பங்கள் கிறைந்த இந்த உலகத்திற்கு வருகிறது. இது கரும காண்டத்தின் நீணட முடிவாய் நிலைத்து கிற்கிறது. காரண காரியங்கள் பூரணமாக் கருதி யுணர வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/160&oldid=1327121" இலிருந்து மீள்விக்கப்பட்டது