பக்கம்:தரும தீபிகை 7.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2470 த ரும பிே கை செய்த வினைகளின்படியே தேகங்களை எடுத்துப் போகங் களை நுகர்ந்து வேர்கள் திரிந்து வருவது விரிக்க வியப்புகளே விக்ளத்து வாழ்வுகளின் சூழ்வுகளே வளமா விளக்கி வருகிறது. பலவகையான உடல்களை மருவி அளவிடலரிய பிறவிகளில் ஓயாமல் உழந்து எவ்வழியும் பெருக்தியரங்களையே நுகர்ந்த வருதலால் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவது உயிரின் தாக மாய் ஒங்கி கின்றது. துக்கங்களால் பக்குவங்கள் படிகின்றன. பொல்லாத ஆசைகளாலேயே புலையானியிறவிகள் பொங்கி வந்துள்ளன. அடர்ந்து படர்க்க தொடர்ந்து மூண்டுள்ள அல்லல்கள் அறவே ஒழிய வேண்டுமானல் முதலில் அவாவை அடியோடு ஒழிக்க வேண்டும். நீண்டு படர்ந்து கெடித ஓங்கி யுள்ள மரம் நிலையாய் நிலைத்து நிற்பது மூலவேரின் பலத்தினலே யாம்; அந்த அடிவேர் அழிந்தால் செடிய மரம் நேரே விரைந்து விழ்ந்துவிடும்; அதுபோல் ஆசை ஒழியின் பிறவி அப்பொழுதே நாசமாய் அழிந்து போம்; போகவே எகமான இன்பமாம். அவாவினே ஆற்ற அறுப்பின் தவாவினே தான் வேண்டும் ஆற்ருன் வரும். (குறள், 367) ஆசையை அறவே ஒருவன் அறுத்து ஒழித்தால் பின்பு அவன் கருதியபடி எல்லாம் உறுதி கலங்கள் பெருகி உயர் பேரின்பம் ஓங்கி வரும் எனத் தேவர் இங்ங்னம் உணர்த்தி யுள்ளார். இனிய சுகங்களே வேண்டும் என்று யாண்டும் எண்ணி வருகிற வேர்கள் கொடிய தக்கங்களை அடைவதற்குக் காரணம் இங்கே பக்குவமாக் காட்டப்பட்டுள்ளது. காட்சி யைக் கண்டு தெளிந்து மாட்சியை மருவிக்கொள்ள வேண்டும். உற்ற உடல் அழிந்து ஒழியுமுன் உயிர்க்கு உறுதியைப் பெற்றவனே பிறவிக் கடலைக் கடந்தவனகிருன். யாதொரு அல்லலும் நேராமல் ஆன்மாவை மேன்மையாகப் பாதுகாத்தக் கொள்ளுவதே நல்ல ஞானமாம். அந்த ஞானமே ஊனமான ஈன நிலைகளை உணர்த்தி உண்மையான பேரின்ப நலன்களைப் பெறச் செய்கிறது. தாய ஒளியால் மாய இருள் மறைகிறது. உடம்பின் இழிவையும் உயிரின் உயர்வையும் பிறவித் துய ரையும் தெளிவாத் தெரிய நேர்ந்தவன் எவ்வழியும் செவ்வையா இனிது முயன்று அரிய கதிகளை நேரே அடைய சேர்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/161&oldid=1327122" இலிருந்து மீள்விக்கப்பட்டது