பக்கம்:தரும தீபிகை 7.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 24.71 983. பிறந்த பிறப்பால் பிறவாத இன்பம் பிறந்து வரவே பெருகிச்-சிறந்தொருவன் வாழ்வானே ஆமாயின் வானவரும் அன்னவனேச் சூழ்வார் தொடர்ந்து தொழுது. (E) இ-ள் மனிதன் எனப் பிறந்த ஒருவன் நிலையான புனித இன்பம் கிறைத்து வருமாறு வாழ்ந்து வர வேண்டும்; அவ்வாறு வரின் அவனைத் தேவரும் உவந்து ஆவலோடு சூழ்ந்து வருவார் என்க. அருமையுடையது என மனிதப் பிறவி பெருமை அடைக் துள்ளது; அத்தகைய அரியதை மருவி வந்துள்ளவன் அதற்கு உரிய பயனை அடைவது பெரிய கடமையாய் அமைந்தது. அரிய நல்ல கருவியை உரிமையாப் பெற்றவன் அதனல் பெறவுரியதை விரைந்து பெறவில்லையானல் இழிந்த மடையனகின்ருன்;ஆகவே அவனுடைய வாழ்வு பழிபடிந்து இழிவடைந்து பாழாகின்றது. அறிவுடைய பிறப்பை அடைந்தவன் தன் ஆன்மா எதாவது சிறிது மேன்மை அடையும்படி செய்து கொண்டபோது தான் சிறந்தவன் ஆகிருன்; பிறந்த பிறப்பும் ஒரளவு உயர்ந்து திகழ்கி றது. உயிர்க்கு ஊதியம் புரியாதவன் துயர்க்கு வழி கோலித் தொலைந்து போதலால் அவன் தோற்றம் பழிக்கு இடமாய்ப் பரிதாப நிலையில் இழிந்து விருதாவாய் முடிகின்றது. எந்தப் பிறப்பு எய்திலுைம் எவ்வழியும் துன்பங்களே நிறைந்துள்ளமையால் யாண்டும் பிறவாமையே இன்பம் என வந்தது. உள்ளம் தெளிந்த ஞானிகள் பிறப்பின் அல்லல்களைக் குறிப்போடு உணர்ந்து பிறவாத சிறப்பு நிலையைப் பெற விரை கின்ருர். வெப்ப துயர்களை அறிவது மெய்யறிவாகிறது. "யானே முதலா எறும்பு ஈருய ஊனமில் யோனியின் உள்வினே பிழைத்தும், மானுடப் பிறப்பினுள் மாதா உதயத்து ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும், 5 ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈரிரு திங்களின் பேரிருள் பிழைத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/162&oldid=1327123" இலிருந்து மீள்விக்கப்பட்டது