பக்கம்:தரும தீபிகை 7.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2472 த ரும தீபிகை அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் 10 ஆறு கிங்களின் ஊறலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களின் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருகரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் 15 துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்த அக் காலே ஈண்டியும் இருத்தியும் எனப்பல பிழைத்தும் காலே மலமொடு கடும்பகல் பசிகிசி வேலை கித்திரை யாத்திரை பிழைத்தும் 20 கருங்குழற் செவ்வாய் வெண் ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக் கச்சற கிமிர்ந்து கதிர்த்து முன்பணேத்து எய்த்திடை வருந்த எழுந்து புடை பரந்து ஈர்க்கிடை போகா இளமுலே மாதர்கம் 25 கூர்த்த கயனக் கொள்ளேயில் பிழைத்தும் பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறுஎனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடம் பிழைத்தும் செல்வம் என்னும் அல்லவில் பிழைத்தும் 30 நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் புல்வரம்பு ஆய பல துறை பிழைத்தும் தெய்வம் என்பதுஓர் சித்தம் உண்டாகி' (திருவாசகம்) யானே முதல் எறும்பு ஈருகவுள்ள பிராணி வகைகளிலிருந்து தப்பிப் பிழைத்து அரிய மனிதப் பிறவியை அடைக்கேன்; தாயின் கருப்பையில் பத்து மாதங்கள் பதைத்துக் கிடந்து உற்ற துயரங்களை எல்லாம் கடந்து உலகில் பிறக்கேன்; பிறந்த பின்பு அடர்ந்து தொடர்ந்த துன்பங்களையும் கடந்து வளர்ந்து வாலிபம் அடைந்தேன்; காமத் தீயால் வெந்து கொங்தேன்; கல்விச் செருக்கு செல்வத்திமிர் அதிகாரகோப் ஆசைப் பேப் முதலிய பொல்லாத அல்லல்கள் யாவும் அளிதில் நீங்கினேன்; நீங்கவே எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உளன் என்னும் நல்ல உணர்வு உள்ளே சிறிது ஓங்கியது; அவ்வாறு ஒங்கியும் உலகப் புலைகள் ஒழிந்து மேலே கிலேயாப்ப் போக முடியாமல் நெஞ்சம் மயங்கி கிற்கின்றேன் ஈசா என்.று மாணிக்கவாசகர் இறைவனே சோக்கி இவ்வாறு உருகி மறுகி யிருக்கிருர், அவர் கருதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/163&oldid=1327124" இலிருந்து மீள்விக்கப்பட்டது