பக்கம்:தரும தீபிகை 7.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2473 மொழிந்துள்ள உறுதிகலங்கள் யாவும் ஒர்ந்து சிக்திக்கத்தக்கன. பிறவித் தயர்களின் நிலைகளையும், அதிலிருந்த தப்பி உய்வா ாது அருமையையும், அவ்வாறு உய்ந்து போகின்ற மகான்களு டைய மகிமையையும் இங்கே நாம் ஒருங்கே உணர்ந்து கொள் கிருேம். புனித மதி இனிய கதியை எப்துகின்றது. உண்மை தெளிந்தவர் உயிர்க்கு உறுதிகலனை விழைந்து உயர்ந்து உய்தி பெறுகின்ருர்; தெளியாதவர் உலக போகங் களில் இழிந்து களிமிகுந்து உழல்கின்றர். மனம் மருண்டு மதி யிருண்டு மாய மோகங்களில் ஆழ்த்து மையல் மயக்கங்களில் வீழ்ந்து வெப்பதுயரங்களையே வைய மாங்கர் விளைத்து வருகின் றனர். அவ்வாறு அவல நிலையில் இழிந்து கிடந்தும் கவலையின்றி வாழ்வது ம | ய ர வினேகமாய் மருவியுள்ளது ஞான விழி தெளிவாயில்லாமையால் ஈன வழியில் இளிவாய் இ ஆழி ந் து போகின்ருர். மெய்யுணர்வே உய்யும் வழியை அருளுகிறது. வைய மையல் ங்ேகி உய்தி பெறுவது மிகவும் அரிய செயல்; அரிய பெரிய அந்தப் பேறு பெறுபவரை வானவரும் வியந்து நோக்கி வாழ்த்தி மகிழ்கின்ருள். மேலான பிறவியால் பெற வுரிய மேன்மையான பலன் மீண்டும் பிறவாமையே; அதனை ஆன்மஞானிகள் எளிதே இனிது அடைந்து கொள்ளுகின்றனர். 984. இனிய இதங்களேயே எவ்வழியும் ஆற்றி மனிதன் புனிதனுய் வாழின்-தனியான பேரின்ப வாழ்வு பெருகி அவனிடம் ஒரின்ப மாக உறும். (+) இ-ள். எவர்க்கும் இனிய இகங்களையே புரிந்து எவ்வழியும் மனி தன் புனிதனப் வாழ்ந்துவரின் பேரின்ப வாழ்வு அவன் பால் கேரே பெருகி வரும்; அவ் வரவே பிறவியின் பயனும் என்க. இன்ப வாழ்வின் இயல்பை இது இங்கு நன்கு உணர்த்தி யுளது. வாழின் இன்பம் உறும் என்ற கல்ை அங்கனம் வாழா வழித் துன்பமே வரும் என்பது தெளிவாய்த் தெரிய வந்தது. தான் ஆற்றிய கருமங்களின் பலன்களை யாண்டும் யாதும் 310

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/164&oldid=1327125" இலிருந்து மீள்விக்கப்பட்டது