பக்கம்:தரும தீபிகை 7.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2478 த ரும தீ பி. கை இழந்தவன் அவலத் தயரங்களில் அழுந்தி என்றும் உழல கேர் இன்முன். வந்த பிறவியைச் சிந்தனை செய்து உயர்ந்து கொள் ளுக என மனித மரபுக்குக் திருமூலர் இங்கே உரிமையோடு உணர்த்தி யுள்ளதை ஊன்றி உணர்ந்த கொள்ள வேண்டும். தான் பிறந்த பிறவி பெரு மகிமையுடையதாகச் செய்து கொள்பவனே சிறந்த ஞானியாய் உயர்ந்து விளங்குகிருன். உள்ளம் தெளிந்து தூய்மை ஆய பொழுது உலக மையல்கள் ஒழிந்த போகின்றன; போகவே உண்மையான பரம் பொரு ளோடு தோய்ந்து உய்தி பெறுகிருன். அந்தப் பேரின் பப்பேறு தான் பிறப்பின் சிறப்பான பயனப் நேரே சிறந்து திகழ்கிறது. பிறந்து பெற்ற அறிவால் பெறும்பயன் கிறைந்த ர்ேமுகில் நீங்கிய வான் என அறிந்து தம்மை அமல வியாபகம் செறிந்து நல்ல தியானத் திருத்தலே.(தேவிகாலோத்தரம் சிறந்த மனித அறிவுக்கு உரிய சீரிய பயனை இது கூறியுளது. கருமேகங்கள் நீங்கிய வானம் போல் பெருமோகங்கள் நீங்கி உள்ளம் தெளிவாய் வி ரி க் து உயர்பானேடு யோகமாய்த் தோப்ந்திருப்பதே விவேகமான பிறவியின் பயனும் என்பதை இதல்ை இங்குக் தெளிவாய் அறிந்து கொள்கிருேம். பிறவித் துயரம் ஒழித்து உய்வது மிகவும் அரிய செயல்; வழி வழியே பழகி வந்துள்ள பாசவாசனையின்படியே ஆசைச் சுழல்களில் சிக்கிச் சிவகோடிகள் யாண்டும் அலமந்து உழல் இன்றன. இந்த மாயச் சுழலிலிருக்க நீங்கித் தாய அ றி வு தோன்றிய போதுதான் பிறவித் துயரம் கெரிய வருகிறத; தெரியவே பிறவாத பெரியோன எண்ணி உருகிப் புண்ணிய ரேராப்ப் புனிக நிலையை அடைய விரை கின்றனர். அத்தகைய வித்தகரே தத்துவ ஞானிகளாப்ச் சிறந்து திகழ்கின்ருர், எடுத்த தேகம் இறக்குமுனே எனக் கொடுத்து கின்னேயும் கூடவும் காண்பனே? அடுத்த பேரறி வாயறி யாமையைக் கெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே. (தாயுமானவர்) பிறந்த தேகம் இறக்க படுமுன் சிறக்க நிலையை அடைய வேண்டும் என்று தாயுமானவர் இறைவனே நோக்கி உருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/169&oldid=1327130" இலிருந்து மீள்விக்கப்பட்டது