பக்கம்:தரும தீபிகை 7.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2326 த ரும பிேகை கல்வி நலங்களைக் கூர்க்க கற்று ஒர்க்க தெளிந்து ஒளி சிறந்துள்ள நிலையே கலை என வந்தது. காவியம் ஒவியம் சிற்பம் இசை முதலியன இனிய கலைகளாய் இசை பெற்றுள்ளன. பொறிகளுக்கும் அறிவுக்கும் கலைகள் சுவைகளை ஊட்டு கின்றன. ஒவியம் கண்களுக்கு உவகை புரிகிறது; இசை செவி களுக்கு இன்பம் தருகிறது; காவியம் அறிவுக்கு ஆனக்கம் அருளுகிறது. உணர்வின் காட்சிகள் ஒளி மிகுந்து வருகின்றன. கண்டதே செய்பவாம் கம்மியர்; உண்டுஎனக் கேட்டதே செய்ப புலன் ஆள்வார்-வேட்ட இனியவே செய்ப அமைந்தார்; முனியாதார் முன்னிய செய்யும் திரு. (நான்மணிக்கடிகை, 40) சிற்பியர், கலைஞர், சான்ருேர், சாந்த லேர் ஆகிய இக் நால்வருடைய நிலைகளை முறையே இது நன்கு காட்டியுள்ளது. கலைஞர் அதிசய மதிமான்கள் ஆகலால் உலகம் கதிசெய்து வர உணர்வு நலங்களை விதி முறையே உதவியருளுகின்ருர். வானத்தில் தோன்றுகின்ற சந்திரனே மாந்தர் யாவரும் வழக்கமாப் பார்த்து வருகின்றனர்; அக்கப் பார்வையில் விய னை பயன் ஒன்றும் அவர் காணவில்லை. கம்பர் ஒருநாள் கண் டார்; அந்தக் காட்சியை உம்பரும் இம்பரும் உவந்த கான இன்ப ஒவியமா வரைக் து காட்டினர். அயலே வருவது காண்க. மருமத்துத் தன்னை யூன்று மறக்கொடும் பாவம் தீர்க்கும் உருமஒதத சிலையி னேரை ஒருப்படுத்து உதவி நின்ற கருமத்தின் விளைவை எண்ணிக் களிப்பொடு காண வந்த தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனிவெண்திங்கள்; - (இராமா, தைல, 50) இலக்குவனும் சீதையும் தொடர்ந்துவர இராமன் கானகம் போனன். இரவு நேரம், நல்ல நிலா வெளிச்சம்; வில்லோடு இராச கம்பீரமாய்ச் செல்லுகின் முன். கீழே கடந்து போகிற இராமச்சந்திரனையும், மேலே தலங்கிகிற்கிற இராச்சந்திரனையும் கவிஞர் ஒருங்கே உவக்க நோக்கினர். ஒளி மிகுந்து திகழ்கின்ற அக்கச் சந்திர மண்டலம் தருமதேவதையின் முகமண்டலப போல் விளங்கியது என வியநஆ கண்டா. மீண்டகாலமாகத் தன்னைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/17&oldid=1326978" இலிருந்து மீள்விக்கப்பட்டது