பக்கம்:தரும தீபிகை 7.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2482 த ரும தீ பி. கை 937. பொறிவெறிய னைன் புலையா யிழிந்து நெறியழிவில் வீழ்ந்து நெளிந்தான்-அறிவமைந்து கின்ருன் கதிகலங்கள் நேரே அடைந்துமேல் வென்ருன் விதியை விரைந்து. (எ) இ-ள். பொறி நுகர்வில் வெறிகொண்டவன் புலையாப் இழிந்து கிலைகுலைந்து வீழ்க்கான்; அவ்வாறு வெறி கொள்ளாமல் அறிவு அமைந்து நெறியே ஒழுகினவன் விதியை வென்று கதிகலங்கள் கண்டான்; அக்தக் காட்சியை மாட்சியாக் காணுக என்பதாம். உயிர் வாழ்வு ஐக்க வகையான குழல்களில் சுழன்று வரு கிறது. கண்ணுல் கர்ண்பது, மூக்கால் முகர்வது, வாயால் துகர்வது, செவியால் கேட்பது, மெய்யால் பரிசிப்பது என்னும் இந்த ஐந்துவகை நெறிகளிலே தோப்ந்த கான் மனிதன் இனிது வாழ்ந்து வருகிருன் வாழ்வின் வழி வழிமுறையே வந்துள்ளது. வாழ்க்கைக்கு இயற்கையாய் அமைந்துள்ள இத் துறை களில் நெறிமுறையே ஒழுகிவரின் அந்த மனிதன் நீதிமானப் கிலவி வருகிருன்; நெறிகடந்து அவாமிகுந்து பொறி வெறிகளில் ஒடித்திரிக்கால் அவன் பழி பாவங்களை அடைய நேர்கின்ருன். மையல் மயக்கங்கள் வெப்ய துயரங்களை விளைத்து விடுகின்றன. இழி வழிகளில் சுவைகளை விழைந்து உழல்கின்றவன் உயர் கிலைகளை ஒருங்கே இழந்து போகிருன். இழிந்த இச்சைகள் ஒழிந்தபொழுதுதான் மனிதன் உச்ச நிலையில் உயர்ந்து ஒளி மிகுந்து வருகிருன். தெளிவான ஞான நிலைக்கு அடையாளம் இளிவான ஈன வழிகளை எவ்வகையும் அனுகாமையே யாம். கடனம் நாடகம் முதலிய கூத்துகளை நாடிக் காண்பதும் இனிய இசைகளை ஈசையாக் கேட்பதும் இன்னத படங்களைப் பார்ப்பதும் இன்பமான பொழுது போக்காக உலக மாக்கள் உவந்து களித்துவரினும் உயர்ந்த தலைமக்கள் அவற்றை இகழ்ந்து ஒதுங்கி எவ்வழியும் செவ்வியராப் இனிது வாழ்கின்றனர். மோகமான காட்சிகள் மாயவெறிகளை விளைத்துத் தீயவழி களில் செலுத்தித் தீங்கே புரியும் ஆதலால் பொறிபுலன்களின் போகங்கள் பொல்லாத புலைகள் என எல்லோர்களால் எள்ளி இகழ சேர்ந்தன. ஊன இழிவை ஞான விழி நன்கு தெரிகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/173&oldid=1327134" இலிருந்து மீள்விக்கப்பட்டது