பக்கம்:தரும தீபிகை 7.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2491 ஒழியாக பிறப்பு ஒருங்கே நீங்கி அழியாக பேன்ப வீட்டை அடையும் வழியை இவை விழிதெரிய விளக்கியுள்ளன. விளுன எண்ணங்களில் மனதை விரியாமல் அடக்கி மெய்யான பரம் பொருளில் செலுத்திவரின் வெப்ய பிறவி விலகிவிடும். பிறவாத ஒருவனைக் கருதி யுருகிப் பிறவியை அறவே நீக்கிக் கொள்ளுக. 940. எவ்வளவோ காலங்கள் இன்ன லிடையிழிந்தாய் அவ்வளவும் ந்ேதி அயலேறி-இவ்வளவில் மானுடம்பெற் றுள்ளாய் மறுபடியும் மாலாகி ஊனுடம்பு கொள்ளா தொழி. (ώ) இ-ள். அளவில்லாத காலங்கள் அல்லல்களில் ஆழ்க்க உழந்து அவ்வளவும் நீந்தி வந்து இந்த அரிய மனித உருவை மருவியுள் ளாய்; மறுபடியும் மையலாப் இழிந்து வெய்ய துயர்களுக்கு வழியாக்கழியாமல் பிறவி நீங்கி விழுமிய நிலையில் உய்க என்க. பெற்றுப் பழகிய பொருள்களில் பிரியம் குறைவதும், பெருத புதிய பொருள்களில் ஆவல் மிகுவதும் மனித இயல்பு களாய் மருவியுள்ளன. பிறவிகளை ஓயாமல் எடுத்து யாண்டும் பெருந்துயரங்களையே அனுபவித்த வந்தம் அவற்றிலிருந்து நீங்கி வேறு உய்திபெற வேண்டும் என்று எண்ணுமல் வினே களித்து இருப்பது விபரீதமான மாய மயக்கமாய் மருவி நிற்கிறது. கண் குருடு பட்டுக் காட்சி இழந்தவன் யாதொரு பொருளை யும் காண முடியாமல் அவலமாய் அலைந்து திரிகிருன்; அது போல் ஞான ஒளி ஒழிந்து போனமையால் ஆன வழி பாதும் தெரியாமல் ஈனமா யிழிந்து மாந்தர் இறுமாந்து உழல்கின்ருர், மாய மருள்களாலேயே தீய பிறவிகள் ஓயாமல் வர நேர்ந் தன. எண் அரிய பிறவிகளில் எல்லையில்லாக அ ல் ல ல் க ளே அடைந்து எப்படியோ தப்பி நீங்கி இந்த நல்ல மனிதப் பிறப்பை அடைந்திருக்கிருேம். அறிவுகலம் உடைய இதிலிருந்து உய்தி பெறவில்லையானல் பின்பு எவ்வழியும் உப்தியில்லாமல் வெவ்விய துயரங்களிலேயே வீழ்ந்து ஆழ்ந்து விளிக்க உழலவே நேரும். உயிரின் கிலையை உரிமையோடு உணர சேர்ந்தவன் உயர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/182&oldid=1327143" இலிருந்து மீள்விக்கப்பட்டது