பக்கம்:தரும தீபிகை 7.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாற்றைந்தாம் அதிகாரம் ஞ ா ன ம். அஃதாவது உண்மை நிலையை ஒர்ந்து உணர்ந்து கொள்ளும் தெளிவு. பிறக்க பயனை விரைந்து பெறவுரிய உயர்ந்த ஆன்மஒளி ஆகலால் சிறக்க கிலேயின் பின் இது வரைந்து வைக்கப்பட்டது. 941. எங்த நிலைஅறிந்தால் எல்லாம் அறிந்ததாய் அங்கமிலா இன்பம் அருளுமோ-அந்த அறிவே பரஞானம் ஆகும் அதனின் நெறியே கதியாம் கினை. (க) இ-ள். எதை அறிந்தால் எல்லாம் அறிக்கது ஆப் எல்லேயில்லாத பேரின்ப நிலையை அருளுமோ அதுவே மேலான ஞானம் என்க. ஞான நெறியே கதி என்றது. அந்த வழியே எந்தவகையும் ஒளிமிகுக்க அதிசய ஆனந்த நிலையை அடைதல் கருதி, முத்தி நிலை வித்தக ஒளியால் எளிகே விழி கெரிய எதிரே கின்றது. அறிவு புத்தி யுத்தி யூகம் விவேகம் உணர்வு என்பன உயர்க்க மனித நீர்மைகளாய் வந்துள்ளன. விலங்கு பறவை முதலிய பிராணிகளை விட மக்கள் உயர்ந்தவர் எனச் சிறந்து நிற்பது சித்த விருத்திகளின் சீர்மைகளாலேயாம். புத்தி தத்து வத்திலிருந்து போகங்கள் விரிந்து ஏதங்கள் கழிந்து இனிதே பொங்கிஎ ழுத்தவர்புத்தேளிர் எனப்பொலிக் துவிளங்குகின்றனர். பொருள்களே ஆப்க்க அறிவது அறிவு. புதுமையாய்ப் புகுக்க தெரிவது புக்தி. ஒத்த கிலேகளை உய்த்து ஒர்வது யுத்தி. யூகித்து உணர்ந்து துணிவது யூகம். வியனுக வேகித்துத் தெளிவது விவேகம். ஊன்றி ஒர்ந்து நுகர்வது உணர்வு. இன்னவாருன இந்த அறிவு வகைகளால் மனித இனம் மாண்படைந்துள்ளது. கல்வி அறிவு, காரிய அறிவு, கலை அறிவு, தொழில் அறிவு, எழில் அறிவு, இசையறிவு முதலாகப் பலவகை யிலும் பரந்து விரிந்து வாழ்வை அறிவு வளம்படுத்தி வருகிறது. 313

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/188&oldid=1327149" இலிருந்து மீள்விக்கப்பட்டது