பக்கம்:தரும தீபிகை 7.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2498 தரும பிேகை இந்த அறிவுத் துறைகள் எல்லாவற்றிலும் உயர்ந்து டொப் யான மருள்களை ஒதுக்கி மெய்யான பொருளையே கருதிநிற்பது மெய்யுணர்வு என வந்தது. இவ் வித்தக வுணர்வையே தத்துவ ஞானம் என்று வடமொழியாளர் வழங்கி வருகின்றனர். உலக நிலைகளை அறிவதினும் உண்மை நிலையை உணர்வது மிகவும் உயர்ந்தது. அந்தத் தெளிக்க உணர்வே இங்கு ஞானம் என வந்தது. அதனையுடையவர் ஞானி என மேன்மையாய் விளங்கி கின்றனர். மாய மயக்கங்கள் நீங்கிய தாய அறிவினர் துயரநிலைகளைக் கடந்து இன்பநிலைக்கு உயர்ந்து போகின்றனர். கிலம் நீர் முதலிய ஐவகைக் கலவைகளால் உலகம் அமைக் தது; பலவகையான உயிரினங்களை யுடையது; நிலையில்லாத கிலேயது; தோன்றின யாவும் ம ைற யு ம் இயல்பின; இக் தோற்றங்களுக்கெல்லாம் மூல முதல் ஒன்று உண்டு அது எல் லாம் வல்லது; என்றும் உள்ளது; எங்கும் கிறைந்தது. இன்ப மயமான அங்கத் தனி முதலை அடைந்த போதுதான் அல்லல் யாவும் நீங்கி ஆன்மா ஆனந்த நிலையை அடையும். இன்னவாறு ஒர்ந்த உணர்ந்து உண்மை தெளிவதே ஒளிநிறைந்த ஞானமாம். ஒளி இருளே நீக்கித் தெளிவா உவகை தருதல்போல் ஞானம் மருளை நீக்கி மாருத பேரின்ப நிலையை நேரே அருளுகிறது. இருள்ங்ேகி இன்பம் பயக்கும் மருள்ங்ேகி மாசறு காட்சி யவர்க்கு. (குறள், 552) மையல் நீங்கிய மெய்யறிவாளர்க்கு வெய்ய துன்பங்கள் நீங்கி மேலான இன்பம் உண்டாம் எனத் தேவர் இங்ங்னம் கூறியிருக்கிருர் பாசப்பம்.று அற்ற ஞானிகளை மாசுஅறு காட்சி யவர் என்று இங்கே காட்டியிருப்பது கருதியுணரத் தக்கது. தெளிவான ஒளி விழிபோல் ஞானம் மனிதனுக்குப் புனிதக் காட்சியாப் கின்று அரிய பல மாட்சிகளை அருளி வருகிறது. பொய்யான புலைகளை நீக்கி .ெ ம ய் ய ர ன நிலைகளை நோக்கி மேலான பேரின்ப கலங்களை ஞானம் நல்குதலால் அது வான அமுதம் என மானவர்க்கு மகிமையாய் மருவியுளது. மெய்வகை தெரிதல் ஞானம் ; விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம்பொறியும் வாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/189&oldid=1327150" இலிருந்து மீள்விக்கப்பட்டது