பக்கம்:தரும தீபிகை 7.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஞ | ன ம் 2505 943. துாய பரத்தின் தொடர்புடைய உன்னேே ஆயாமல் அந்தோ அவலமாய்-மாயப் படுகுழியில் வீழ்ந்து பதைக்கின்ருய் இன்றே நடுகின் றுணர்க கயந்து. (E) இ-ள். நீ தாய பரம் பொருளின் நேயமான உறவினன்; உன் உண்மை கிலையை உணராமையால் புன்மை அடைந்து புலேயாப் இழிந்துள்ளாப், விரைந்து தெளிக்க உயர்ந்து கொள்ளுக. பொய்யான மருளில் மயங்காமல் மெய்யான தெருளைத் தெரியும் தெளிவு மெய் ஞ் ஞானம் என மேவி நின்றது. உயிரின் உண்மை தெரிய உயர்பானின் தன்மையும் ஒருங்கே உனர வருகிறது. அறிவு அதிசய ஆற்றல் உடையது; மனிதனை எவ் வழியும் மகிமைப்படுத்தி வருகிறது; எகையும் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்கிறது; கால தேசங்களைக் கடந்தும் கருதி உணர்ந்து முடிவு காண்கிறது; உலக நிலைகளையும் வான வெளிகளையும் அண்ட கோடிகளையும் ஆ ப் ங் து கொண்டு இவற்றிற்கெல்லாம் ஒரு மூலமுதல் உண்டு என்று காரண காரி யங்களோடு சாலவும் உறுதியா ப்த் துணிந்து கொள்ளுகிறது. இத்தகைய அறிவு மானிடனிடம் வித்தகமாய் விளங்கி யுள்ளமையால் எத்தகைய துறைகளையும் எத்துணைய நிலைகளையும் உப்த்து உணர்ந்து யூகித் து முடிவு காணுகிருன்; தான் கருதிக் கண்ட காட்சிகளே உறுதியான மொழிகளால் கலையின் ஒளிகளோடு உலகம் அறிய நலமா வெளியிடுகிருன். நிலவலையங்களையும், மலை வகைகளையும், கடல் நிலைகளையும், குரிய மண்டலங்களையும், சந்திர கோளங்களையும், விண்மீன்களை யும், வேறு பல கிரகங்களையும் விழைந்து நோக்கி வரைந்து முடிவுகாண கெடிது மூண்டு கடித நீண்டு வருகிற மனிதன் தனது நிலையை ஒரு சிறிதும் உணர்ந்து பாராமல் யாதும் கருதா மல் மருளாய்க் குருடுபட்டிருப்பது பெரிய வியப்பாயுள்ளது. விஞ்ஞானம் என இஞ்ஞான்று வியந்து புகழ்ந்து பேசப் படுவதை யாண்டும் கேட்டு வருகிருேம். இது இக்காட்டுக்குப் புதிது அன்று; பண்டு தொட்டே பாரத நாடு யாரும் அறிய முடியாத அதிசய நிலைகளை அறிந்துள்ளது. உலக நிலைகளையும் 314

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/196&oldid=1327157" இலிருந்து மீள்விக்கப்பட்டது