பக்கம்:தரும தீபிகை 7.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250s தரும பிேகை உயிர்த் தொகைகளையும் தாவர வகைகளையும் தாது மூலங்களையும் ஆதிமூல நிலைகளையும் நன்கு தெரிந்த யோகிகளும் சித்தர்களும் ஞானிகளும் எவ்வழியும் கத்துவ ஒளிகளோடு தழைத்திருங் தள்ளனர். உலகநிலை யாவும் அகித்தியம் என்று .ெ க ரி க் து கொண்டமையால் அவற்றை விரித்து விளக்கிப் பொறித்து வையாமல் புனிதநிலையில் பொருக்தி இனியசீலங்களில்கின்றனர். இக்க உலகத்திலிருந்து சூரியன் இருக்கும் து.ாரத்தை நேரே சரியா அளந்து பார்த்ததுபோல் அளவுகள் கூறப்படும் உளவு களைக் காணுகிருேம். ஒன்பது கோடியே இருபத்தேழு லட்சத்து நாற்பத்தெனணுயிரத்து நானுாற்று எண்பத்தொன்பது மைலில் சூரியன் உள்ளான் என்று சொல்லுவதால் நல்ல எல்லே தெரிந்த அறிஞர் என விஞ்ஞானியரை வியந்த ஏமாந்து போகலாகாது. விஞ்ஞானம் முதலிய எஞ்ஞானங்களுள்ளும் அஞ்ஞானம் ஊடுருவி கின்று அதிகாரங்கள் புரிகின்றது. விசேட ஞானம், வியஞன ஞானம், விபரீத ஞானம், விருதா ஞானம், விளிவு ஞானம் என்னும் பொருள்களை விஞ்ஞானம் என்னும் சொல் மருவியுளது. காக்கையின் கறுப்பையும் காடியின் மயிரையும் கருதி நோக்கிக் கருமை அளவுகள் காண்பதும் விஞ்ஞானமே யாம். பகுத்து அறிவதில்கிலேயான பலன் நலமாயிருக்கவேண்டும். பஞ்சபூத பரிணுமங்களைப் பகுத்து நோக்கிச் சடதத்துவங் கேைய ஆராய்ந்த அல மங் த கிற்கும் விஞ்ஞானத்தினும் என்றும் அழியாக ஆத்தும தத்துவங்களை ஆராய்ந்து தெளிந்து அல்லல்களை நீக்கி யருளும் மெய்ஞ்ஞானம் எஞ்ஞான்றும் மேலானதாய் விழுமிய நிலையில் விளங்கியுள்ளது. இந்த உண்மை ஞானத்தின் எதிரே வேறுவகையான விஞ்ஞானங்கள் எண்மை யாகவே இழிந்து நிற்கும். தத்துவ ஞானம் சதாசிவ சத்தியாம். விஞ்ஞானத் தோர்க்கு ஆணவமே மிகுதனு தஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான் என்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும் மெய்ஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. (1) விஞ்ஞான கன்மத்தால் மெய்யகம் கூடிய அஞ்ஞான கன்மத்தி ல்ைசுவர் யோனிபுக்கு எஞ்ஞான மெய்திண்டி யேயிடை இட்டுப்போய் மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. (திருமந்திரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/197&oldid=1327158" இலிருந்து மீள்விக்கப்பட்டது