பக்கம்:தரும தீபிகை 7.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞான ம் 2511 வுயிர்களுக்கு இதமா ஒருவன் செய்துவரின் அவன் உயிரில் ஏறி யிருந்த மாசுகள் கழிகின்றன; கேசுகள் வளர்கின்றன; வளர வே உள்ளம் புனிதம் ஆகிறது; அந்தச் சிக்க சுத்தியால் ஞானம் தெளிவாய் ஒளிவீசி எவ்வழியும் திவ்விய இன் பம் அருளுகிறது. பலன்விழை வுருதுகரு மம்பல இயற்றின் அலகறு பவத்தினுள பாவம் அறும்; அம்ருல் நிலவிய மனம்புனிதம் ஆவது நிகழ்ந்தால் மலேவிலுயர் ஞானம்வரும்; வரில் அடைவைன் வீடே. (அகூர்மபுராணம்) புனித கருமத்தின் புண்ணியத்தால் ஞானம் விளைகிறது; அது பேரின்ப வீட்டைக் கருகிறது என இடது குறித்துள்ளது. தத் துவக் குறிப்புகள் கூர்க்க ஒர்க்க சிந்திக்கத் தக்கன. தரும நீர்மைகள் கழுவி வரும் அளவு அறிவு தெளிவாய் விழுமிய நிலையில் விளங்கி வருகிறது. சித்த சுத்தியும் தத்தவ ஞானமும் ஒத்த நிலையில் நித்திய சோதிகளாப் நிலவியுள்ளன. எந்த உள்ளம் புனிதமாய் இனிமை கோப் க்தி வருகிறதோ அந்த மனிதனிடம் அதிசய மகிமைகள் வெள்ளமாய் வந்து குவிகின்றன. சித்த சுத்தி முக்தியின் கிலேயமாகிறது. உயர்ந்த மனிதனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் தன்னை அறிந்து இன்னல் நீங்குவதே. உடல் உயிர் என மருவியுள்ள இருவகை நிலைகளிலும் தனது உண்மை நிலையை உரிமையோடு ஊன்றி உணர்ந்தவன் உயர்ந்த ஞானியாய் உய்தி பெறுகிருன். அவ்வாறு உணராதவன் அஞ்ஞானியாய் இ மிக் த அவலம் அடைகிருன். மடமை இருள் ஒழியின் மகிமை ஒளி வெளியாம். தனது உண்மையான ஆன்ம நிலையை உணராமல் வேறு எவ்வளவு மேன்மைகளை வெளியே பெற்றிருத்தாலும் அவ்வள வும் மாய மருள்களேயாம். மடமையால் நோர்ந்த பிறவியில் எவ் வழியும் வெவ்விய மையல் இருள்களே மண்டியுள்ளன. இருள் கிறைந்த இடம் பாண்டும் பயங்கரமாய் நீண்ட துயரங்களே நிறைந்திருக்கும்; அதுபோல் மருள் மலிந்த பிறப்பு எவ்வழியும் குருடுபட்டுத் துன்பங்களே .ெ த | ட | ங் து படர்த்து அடர்க் திருக்கும் ஆதலால் அது ஒழித்த போதுதான் பேரின் பம் சேரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/202&oldid=1327163" இலிருந்து மீள்விக்கப்பட்டது