பக்கம்:தரும தீபிகை 7.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2512 தரும பிேகை நீண்ட காலமாய் இருள் மூண்டு இருந்தாலும் ஒளிவந்தவுடனே அந்தக் கொடிய இருட்டு அடியோடு நீங்கிப் போம்; அதுபோல் ஊழியும் நீங்காமல் தொடர்ந்து வந்த மாய மருள் ஞான ஒளி விசியபோது ஒருங்கே நாசமாப் ஒழிக் து போப்விடும். பிறவித் துயர்கள் பெருகி அறியாமையில் மறுகி அவலமாய் அலைந்து திரிந்து கவலைகளோடு தொடர்ந்து வந்த சீவன் ஞானம் அடைந்தவுடனே அ ல் ல ல் க ள் யாவும் நீங்கி எல்லையில்லாத பேரின்ப நிலையை நேரே எய்தி நெடிது மகிழ்கின்றது. தன்னே அறிந்தவன் சாமியாய் வாழ்கின்ருன்: பின்னே அறிந்தவன் பேயாய் அலேகின்ருன். என்பது பழமொழியாப் வந்துள்ளது. ஞானயோகிகளின் கிலைகளையும் ஈன மோகிகளின் புலைகளையும் இம் முதுமொழி அதி விசயமா விளக்கி மதிநலம் அருளியுளது. அறிய வுரியதை அறிக என அறிவு கூறியதில் கூரிய அறிவு கலம் குலாவி மிளிர்கிறது. பொறி புலன்கள் மருவியுள்ள உடல் பினமாய் விழுந்து விடும்; புலையான இந்தப் பிணக்கை கிலேசன்று கம்பிப் பேதை யாப் இழிந்து போகா கே, என்றும் அழியாக உயிரையே நீ என்று உணர்ந்து மேதையாய் உயர்ந்து மேலான கதியைக் கானுக என இது காட்டியிருக்கிறது. இக்க ஞானக் காட்சியை நாடிக் கண்டு ஆன்ம ஆட்சியை அடைந்து கொள்ளவேண்டும். வேனை உண்மையா அறிந்தபோது அங்கே சிவனேயும் எண்மையாத் தெரிந்து கொள்ளுகிருன்; கொள்ளவே பேரின் ப வெள்ளம் பெருகக் காணுகிருன் கன்ன அறியவே கலைவனும் தெரிதலால் நிலையான ஆனந்த வாரி கேரே பெருகி வருகிறது. தன்னே அறிந்து சிவனுடன் தாகை மன்னு மலம்குணம் மாளும்; பிறப்ப அம்; பின்னது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை கண்ணுமே. (1) தன்னே அறியத் தனக்கு ஒரு கேடுஇல்லை; தன்னே அறியாமல் தானே கெடுகின் ருன்; தனனே அறியும் அறிவை அறிந்தபின் தன்னேயே அர்ச்சிக்கத் தான் இருந் தானே. (2) (திருமந்திரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/203&oldid=1327164" இலிருந்து மீள்விக்கப்பட்டது