பக்கம்:தரும தீபிகை 7.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 25.15 மனிதன் ஆகி விடுதலால் சேரும் இனங்களைக் குறித்து மனம் கூர்ந்து ஒர்ந்து அவன் மிக்க எச்சரிக்கையா யிருக்க வேண்டும். கல் இனத்தின் ஊங்கும் துணையில்லை; தியினத்தின் அல்லற் படுப்பதுாஉம் இல். (குறள், 460) ால்லவர் சேர்க்கை கலம் பல தரும்; தியவர் தொடர்பு அல்லலே விளைக்கும் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்ல அறிவைக் கெடுத்து பொல்லாத புலைகளைப் புகுத்தித் தீய வர் கெடுத்து விடுவர் ஆதலால் அந்த இனத்தைத் தீயினும் திய காக வெறுத்து அயலே விலகி நயமா ஒதுங்கி விட வேண்டும். தீயாரைக் காண்பதுவும் தீது என்று ஒளவையார் இவ்வாறு அறிவுறுத்தியிருக்கிருர். தீயவர் தொடர்பு துயரங்களையே விளைக் கும் ஆதலால் அவரை யாதும் எவ்வகையும் அணுகலாகாது. Villainous company hath been the ruin of me. - (Shakespeare) கெட்டவர் தொடர்பு என்னை அழித்துக் கொண்டிருக்கிறது என இது குறித்துளது. நீச இனம் நாசமே செய்யும்; அதனை அறவே விலகி ஈசனை எண்ணுக; அதனல் புண்ணியங்கள் பொங்கி எண்ணரிய இன்பங்கள் நன்கு விளைந்து வரும். இறைவன் ஒருவனே மெய்ப்பொருள். வேறு நிலைகள் யாவும் பொய்ப்புலேகளே எனத் தெளிந்து கொள்வதே சிறந்த ஞான மாம். இத்தகைய ஞானத்தை அடைந்தவர் உ. க் க ம ஞானி களாய் ஒளி பெற்றுச் சித்த சாக்தியோடு திகழ்ந்து நிற்கின்ருர். உலக நிலைகளை விலகிப் பானையே கருதி உருகி யுள்ளவரு சடைய உரைகளும் செயல்களும் உணர்வு நலங்களை உதவி உயிர்க்கு இனிய அமுகங்களாய்ப் பெருகி வருகின்றன. மெய்யில் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளுமிவ் வையம் தன்னெடும் கூடுவது இல்லையான் ஐயனே! அரங்கா! என்று அழைக்கினறேன் மையல் கொண்டொழிந் தேன் என்தன் மாலுக்கே. (1) எத்திறத்திலும் யாரொடும் கூடும்.அச் சித்தம் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் அத்தனே! அரங்கா! என்று அழைக்கின்றேன் பித்தய்ை ஒழிந்தேன் எம்பிரானுக்கே. [9] (பெருமாள் திருமொழி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/206&oldid=1327167" இலிருந்து மீள்விக்கப்பட்டது