பக்கம்:தரும தீபிகை 7.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2516 த ரும பிே ைக குலசேகரப் பெருமாள் என்னும் இவர் சேரநாட்டு மன்னன். உலகு உயிர்களுக்கெல்லாம் ஒர் இ ைற வ ன் உண்டு என்று தெளிந்து திருமாலிடம் பெருமால் கொண்டு இவர் உருகியுள்ள கிலைகளை இவ்வுரைகளால் உணர்ந்து கொள்கிருேம். மெய்யறிவு மிகுந்தபோது வைய மையல்கள் ஒழிந்து போகின்றன; அவ் வுண்மையை இவருடைய வாய்மொழிகள் இங்கே தெளிவா விளக்கி கிற்கின்றன. அரிய பெரிய அரச செல்வங்களையும் இனிய சுகபோகங்களையும் வெறுத்துத் தனி முதலே நாடியுள்ள மையால் இவருடைய சித்தத்தின் பரிபக்குவத்தையும் தத்துவ ஞானத்தையும் உய்த்துணர்ந்து உவந்து வியக்த கொள்கிருேம். மெய்யுணர்வு தெய்வ ஒளியாப்த் திகழ்கிறது. 946. உரையுணர்வுக் கெட்டா ஒருபொருள் உண்டு கரையறுபே ரின்பமது கண்டாய்-திரைமறைவில் உள்ளபொருள் காணும் உறுதிபோல் உற்றவிப் பொள்ளலுடல் காண்க புகுந்து. (க) இ-ள். உரைக்கும் உணர்வுக்கும் எட்டாத ஒரு தனியான தலை மைப் பொருள் பேரின்ப நிலையமாப் எங்கும் பெருகியுள்ளது; திரை மறைவில் இருப்பதைக் காண்பது போல் தெளிவான உணர்வால் உன் உடலகத்தே அதனைக் கண்டு மகிழ்கஎன்பதாம். கண்ணுல் உலகப் பொருள்களைக் காண்கின்ருேம்; காசால் ஒலிகளைக் கேட்கின்ருேம்; மூக்கால் வாசனைகளை அறிகின்ருேம்; இவ்வாறு பொறிகளால் கனவில் உணர்ந்ததையே கினேவுகூர்ந்து வருகின்ருேம். விழுமிய நிலையில் தெளிவாக எதையும் சிக்கனே செய்வதில்லை. கண்டதையே கண்டு உண்டதையே உண்டு கொண்டதையே கொண்டு குருடுபட்டு வாழ்வதே முருடுபட்ட வாழ்வாய் யாண்டும் நீண்டு அவல கிலையில் பெருகி வருகிறது. அரிய மனித அறிவுக்கு உரிய பெரிய பயன் அறிவானந்த மாயுள்ள ஆதிமூலப் பொருளை அ றி ங் து கொள்வதேயாம். இறைவன் அருவமாய் எங்கும் நிறைந்துள்ளான்; பொறிபுலன் களால் அவனே யாதும் அறியமுடியாது; உரை உணர்வுகளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/207&oldid=1327168" இலிருந்து மீள்விக்கப்பட்டது