பக்கம்:தரும தீபிகை 7.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 2517 ாட்டாமல் ஒளி மயமாய் ஒங்கியுள்ள பரமனை வெளியே தெளி வாக் காண இயலாது ஆயினும் ஞானிகள் அவனைக் கண்டு மகிழ்கின்ருர். உணர்வின் ஒளி உரியவனைத் தெரிகிறது. பசுவின் உடல் முழுதும் பால் சுரங்கிருந்தாலும் முலை வழி யே அது வெளி வருகிறது; சூரியன் ஒளி எங்கும் பரவி கின்ரு அம் பளிங்கு முதலிய கண்ணுடிகளிலேயே கெரிய நேர்கிறது; அழுக்குப்பீடிந்திருந்தால் கண்ணுடியிலும் கதிர் ஒளியைக் காண முடியாது. அழுக்கு இல்லாத இடக்கே தான் கதிர் ஒளி எதிர் விசுகிறது. மனம் மாசுபடிந்திருந்தால் ஈ ச ன் ஒளி அங்கே யாதும் தெரியாது; மாசு படியாத மனத்திலேதான் பரஞ் சோதியின் தேசு வீசுகிறது. சித்த சுத்தி யில்லாதவன் ஈசனைக் குறித்து எத்தனை வகையாப்ப் பேசினலும் பித்தன் பிதற்றுவது போல்வதே யாம். பிழையான வழியில் அவனைக் காண இயலாது. உரைஅற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்! கரை அற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ? திரைஅற்ற ர்ேபோல் சிந்தை தெளிவார்க்குப் புாைஅற்று இருந்தான் புரிசடை ஈசனே. (திருமந்திரம்) வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பொருளைக் குறித்து வினே பேசி வெறியராய்க் கழியாதீர்கள்; உங்கள் உள்ளத் கைத் தாப்மை செப்து வையுங்கள்; வைத்தால் பரம பரிசுத்த மான அங்கப் பேரின்பப் பொருள் தெளிவாய்த் தெரிய வரும் எனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். இதயம் சுத்த மால்ை ஈசன் அங்கே உதயமாய் உவந்து இருப்பன் என்பது உணர வந்தது. புனித மனம் புனிதனது இனம். அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானப் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள் இருக்கும் புரானர். (தேவாரம்) தாய ஞானிகளுடைய இதய கமலத்தில் இருக்கும் பரமன் பன ஞானசம்பந்தர் இங்ங்னம் ஈசன் கிலையைக் குறித்திருக்கி முர். பாசம் நீங்கியபோது பசு பதிபாப் வருதலால் ஈசனுக்குப் பசுபதி என்று ஒரு இனிய பெயரும் தனியே வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/208&oldid=1327169" இலிருந்து மீள்விக்கப்பட்டது