பக்கம்:தரும தீபிகை 7.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஞான ம் 2519 மெய்ஞ்ஞான ஒளியால் அஞ்ஞான இருள் நீங்கி அருள் நிலையில் நின்ற அப்பர் ஞான முதல்வனை பரமனே ஞானத் தளையிட்டு வைத்திருப்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் கிறைந்த வானமே எனக்கு வந்துவந்து ஒங்கு மார்க்கமே மருளர்தாம் அறியா மோனமே முதலே முத்திகல் வித்தே முடிவிலா இன்பமே செய்யும் தானமே தவமே கின்னேநான் கினேந்தேன் தமியனேன் தனே மறப் பதற்கே. (தாயுமானவர்) ஞானமே வடிவமான மோன யோகிகள் மோகமாய் நாடித் தேடுகின்ற கேட்டம் எனப் பரமனைக் குறித்துக் காட்டித் தாயுமானவர் இங்கனம் உறவு கொண்டாடி யுள்ளார். தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான சபையிலே தனிநடம் புரியும் து.ாயகின் பாதம் துணை எனப் பிடித்தேன் து.ாக்கமும் சோம்பலும் அயரும் மாயையும் வினேயும் மறைப்பும் ஆணவமும் வசீளத்துஎனப் பிடித்திடல் வழக்கோ நாயினேன் இனி ஒர் கணம்தரிப் பறியேன் நல்லருட் சோதிதந் தருளே. (அருட்பா) தாய் தந்தையரிடம் மைங்கன் உரிமைகளை வேண்டுதல் போல் சிவபெருமானிடம் இராமலிங்க அடிகள் இங்கனம் அருளை வேண்டி யிருக்கிருர். உன் உடலிலுள்ள சீவனே நீ; தேகம் முதலிய மோக மயல்களை நீக்கி உனது எக நிலையை உணர்க; அவ்வாறு உணரின் இறைவன் உறவு என உனது உயர் தலைமை தெரிய வரும். ஞான விழி திறந்து உன் தானம் கானுக. தன்னேநேர் காணின் தலைவனும் அப்பொழுதே இன்னமுதம் ஆக எதிர்எழுவன்-உன்னே உணர உணர உயரின்பம் ஓங்கிப் புணரப் புணரும் புறம். இதனை உணர்ந்து உண்மை தெளிக. கங்கங்ாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/210&oldid=1327171" இலிருந்து மீள்விக்கப்பட்டது