பக்கம்:தரும தீபிகை 7.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2532 தரு ம தி பி கை கண்ஆகிக் கண்ணுக்குஓர் மணியும் ஆகிக் கலே ஆகிக் கலைஞானம் தானே ஆகிப் பெண் ஆகிப் பெண்ணுக்குஓர் ஆணும் ஆகிப் பிரளயத்துக்கு அப்பாலோர் அண்டம் ஆகி எண் ஆகி எண்ணுக்குஓர் எழுத்தும் ஆகி எழுஞ்சுடராய் எம்.அடிகள் நின்றவாறே. (தேவாரம்) பார்த்த இடம் எல்லாம் பரமன்காண் அம்மானே பாராமல் இங்காளும் பாழ்பட்டேன் அம்மானே. (திருவம்மானே எங்கும் சிவம்ஒழிய இல்லே அவன் கன்ஆனே அங்கம் திரள்கருவி ஆணவமாம்-பொங்குமிருள் மைசெய்த மாமாயை மாயைவினே மற்ற&னத்தும் பொய்பொப்பொய் பொய் பொய்பொப் பொய். (சிவானந்தமாலை) ஞானக் காட்சியுடையவர் கடவுளைக் கண்டு களிக்கும் மாட் சிகளை முன்னதாக இவை காட்டியுள்ளன. இவ்வாறு கன் னைக் கானும் ஞானிகளே இறைவன் முறையே கண்டு களிக்கிருன். யோமாம் பச்யதி சர்வத்ா ஸர்வம் ச மயி பச்யதி தஸ்யாஹம் ப்ரணச்யாமி ஸ ச, மே ப்ரனச்யதி. (பகவற்கீதை 6-80) எவன் என்னை எங்கும் காண்கிருனே, எல்லாப் பொருள் களையும் என்னிடத்தே எவன் பார்க்கிருனே, அவனுக்கு நான் இனியவனுகிறேன்; எனக்கு அவன் உரியவனகிருன் எனக் கண்ணன் கூறியுள்ள இது இங்கே எண்ணி யுனா வுரியது. இவ்வாறு தெளிவான ஞானக் காட்சியுடையவர் எவ்வழி யும் சீவன் முத்தராய்த் திவ்விய நிலையில் சிறந்த திகழ்கின்ருர், யஸ்மிங் ஸர்வானி பூதாகி ஆத்மைவாயூக் விஜாகத: தத்ர கோ மோஹ: க. சோக ஏகத்வம் அது பச்யத: (ஈசாவாஸ்யம். 7) எல்லாச் சீவ கோடிகளும் பரமாத்த விலிருந்தே தோன்றி யுள்ளன என்று ஒருவன் அறிந்தபொழுது ஏகமான ஒரே உண் மை நிலையையே தெரிகிருன்; தெரியவே சோக மோகங்கள் ஒளி முன் இருள் போல் அவன் திரே ஒழிக்க போகின்றன என ஈசாவாசிய உபநிடதம் ஏழாவக மந்திரம் இவ்வாறு குறித் துள்ளது. அறிய வுரியதை அறியவே ஆனந்தம் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/223&oldid=1327184" இலிருந்து மீள்விக்கப்பட்டது