பக்கம்:தரும தீபிகை 7.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞானம் 2535 தண்மை அனல் வெம்மைஎனத் த&னய கலா திருந்துசரா சரங்கள் ஈன்ற பெண்மையுரு வாகியதன் ஆனந்தக் கொடி மகிழ்ச்சி பெருக யார்க்கும் அண்மைய தாய் அம்பலத்துள் ஆடியருள் பேரொளியை அகத்துள் வைப்பாம். + (திருவிளேயாடல்) சத்து சித்த ஆனந்தம்ாப் எங்கும் பரந்து விரிந்துள்ள பரமன் நிலையை இது வரைந்து காட்டியுள்ளது. மெய்ஞ்ஞானம் இறை வனுக்கு வடிவம் ஆதலால் அதனையுடைய மெஞ்ஞானிகளிடம் அவன் ஆனந்தமயமாய் என்றும் மேவியிருக்கிருன். உணர்பொருளும் உணர்வானும் உணர்வும் எனும் பகுப்புஒழியாது ஒழிந்து பானுப் புணர்விழியும் நீர்நிழலும் தியிரும்பும் புனல்உவரும் பரிதி மீனும் துணைய இரண் டறுகலப்பின் எம்முடனுய்ப் பேரின்பம் துய்த்து வாழ்வார் இணர்விரைத்த மலர்க் கோதாய்! அவர் வடிவே எமக்கினிய கோயி லாமால். (காஞ்சிப்புராணம்) ஞானிகள் எம்முடன் பேரின்பம் துய்த்து வாழ்வார்; அவர் வடிவமே எனக்கு இனிய கோயில் என இறைவியிடம் இறை வன் இவ்வாறு உரிமையோடு உவந்து கூறியிருக்கிருன். எண்டருமெய்ஞ் ஞானிகள்தாம் நன்மை தீமை இயற்றினுமப் பலனுகரார் இவர்தம் மேனி கண்டுதொழு வார் இகழ்வார் தம்பால் எய்தும் கருமுகிலின் செயல்போலக் கருதார் ஒன்றும் பண்டிகலும் வினேயுடலின் பலிப்பி ேைல பகர்காலம் திசைகளருங்தவங்கள் சிலம் கொண்டதியா னம்செபங்கள் பூசையாவும் குறித்திடினும் ஒழித்திடினும் அவர்க்கு அமலன் பணியே. (சிவஞானதீபம்) மேலான ஞானிகளுடைய நிலையை இது விளக்கியுளது. நிலம் நீர் முதலிய பஞ்ச பூதங்களின் கோற்றங்களையும் அகில லோக காரணய்ை இறைவன் இருக்கும் இயல்பையும் பூரணமா அறிந்தவர்கள் ஆதலால் ஞானவான்கள் வான ஒளி போல் எவ்வழியும் திவ்விய கோக்கோடு சிறந்து திகழ்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/226&oldid=1327187" இலிருந்து மீள்விக்கப்பட்டது