பக்கம்:தரும தீபிகை 7.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2332 த ரு ம தி பி கை அழுகிருய்? என்று இரங்கக் கேட்டான். "ஐயா! நான் சாகசாதி மாது; எங்கள் காட்டு வேந்தனுக்கும் கருட தேவனுக்கும் ேேர்ந்த உடன்படிக்கையி ன்படி நாளும் வீட்டுக்கு ஒரு ஆளே அவனுக்குப் பலி கொடுத் வரவேண்டும். இன்று என் முறை; எனக்கு ஒரே ஒரு மகன் சங்ககுடன் என்னும் பேரினன்; எனது கணவன் முன்ன.ே இமந்து போனன்; அருமை மகன் இன்று சாக சேர்ந்துள்ளான்; புத்திரவாஞ்சையான அந்தச் சோகம் என் உயிரைச் சித்திரவதை செய்கிறது; துயரம் பொறுக்கமாட்டாமல் அழுகிறேன்; இன்னும் இரண்டு நாழி கைக்குள் கருடன் வந்து விடுவான்; என் மகன் அதோ காளி கோவில் எதிரேயுள்ள பலி பீடத்தில் இருக்கிருன்’ என்று பரி தாபமாய் உரைத்தாள். அவ்வுரைகளைக் கேட்டதும் இவன் உள்ளம் உருகினன்; மறுகி அழுகிற அவளை இவன் ஆற்றித் தேற்றினன். 'தாயே! நான் உனக்கு மூத்த மகன்; நானே இன்று கருடனுக்கு இரையாவேன்; என் கம்பியை அழைத்துக் கொண்டு நீ ஊருக்குப் போ; யாருக்கும் இதை யாதும் சொல் லாதே; சீக்கிரம் போய்விடு' என்று சொல்லிவிட்டுப் பலிபீடத் தை நோக்கி நடத்தான். அந்த அன்னையும் மகனும் அதிசய பரவசராய்த் திகைத் துத் தடுத்தார்; இவன் அவரை வற்புறுத்தி அகற்றிவிட்டு அந்தப் பலிபீடத்தில் படுத்துக்கிடந்தான் கருடன் வந்தான்; கசையைக் கொத்தித் தின்ருன்; உடல் முழுதும் சணித ர்ேந்த பின் முகத்தை உற்றுப் பார்த்தான். மகிழ்ச்சி யோடு பொலிந்து விாங் பது; கருடன் கலங்கினன். பெரிய திகிலோடு நேரே பேச ாேர்ந்தான். கருடன்: நீ யார்? நாகன? மூேதன்: யாராயிருந்தால் என்ன? உனக்கு வயிறு நிறைய வேண்டும்; இரை இன்னும் உள்ளது; விரைந்து தின்னு. அதன் பின் பறந்து போ! கருடன்: ஐயோ! நீ யார்? உண்மையைச் சொல். சீமூதன்: தசை முழுவதும் கின்றுவிட்டுப் போ; என் உடலில் இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது; உன் குடலில் அதைச் சேர்த்தருள்; வேறுவார்க்கை எதற்கு? ஒல்லையில் உண்டு கொள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/23&oldid=1326984" இலிருந்து மீள்விக்கப்பட்டது