பக்கம்:தரும தீபிகை 7.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2543 சிறந்த புண்ணிய பரி பாகத் கால் தெளிந்த மெய் யுணர்வு அமைகிறது; அதனுல் கித்திய அகிக்கியங்கள் தெரிய வருகின் றன; வரவே பாச பந்தங்கள் நீங்கி என்றும் நிலையான பரம பதத்தை விழுமியோர் உரிமையோடு அடைய நேர்கின்றனர். தசரதன் பெரிய சக்கர வர்த்தி; திருவயோத்தியி லிருக்த அரசு புரிக்கவன்; அதிசய ஆற்றலுடையவன்; பருவம் முதிர்ந்த தும் தனது அருமை மகனை இர ாமனிடம் அரச பதவியைக் கொடுத்து விட்டுத் துறவியாக விரும்பினன். அப்பொழுது த மவு கிலேயைக் குறித்து இராசசபையில் அவன் பேசிய உரைகள் பெருமகிமைகள் உடையன. ஞான ஒளிகளே விசி வந்துள்ள அம் மொழிகளுள் சில இங்கே காண வருகின்றன. கருதி உணரும் அளவு உறுதி நலங்களைத் தெளிவா உணர்ந்து கொள்ளலாம். இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ? துறப்பு எனும் தெப்பமே துனே செ யாவிடின் பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ? (1) அருஞ்சிறப்பு அமைவரும் துறவும் அவ்வழி தெரிஞ்சுற வென மிகும் தெளிவும் ஆய்வரும் பெருஞ்சிறகு உளளனின் பிறவி என்னும் இவ் இருஞ்சிறை கடத்தலின் இனியது யாவதே? (2) இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ துனிவரு நலன் எனத் தொடர்ந்து தோற்கலா கனிவரும் பெரும்பகை 5வையின் நீங்கி அத் தனி.அர சாட்சியில் காழும் உள்ள மே. (3) இழைத்ததி வினேயையும் கடக்க எண்ணுதல் தழைத்த போருளுடைத் தவத்தின் ஆகுமேல் குழைத்தது ஒர் அமுதுடைக் கோரம் நீக்கிவே று அழைத்ததி விடத்தினே அருந்தல் ஆகுமோ? (4) கச்சையங் கடகரிக் கழுத்தின் கண்ணுறப் பிச்சமும் கவிகையும் பெய்யும் இன்னிழல் கிச்சயம் அன்றெனின் கெடிது நாள் உண்ட எச்சிலே நுகருவது இன்பம் ஆகுமோ? (5) இறங்கிலன் செருக்களத்து இராமன் காதைதான் அறக்தலே கிரம்பமூப்பு அடைந்த பின்னரும் துறந்திலன் என்பது ஒர் சொல் உண்டானபின் பிறந்திலன் என்பதின் பிறிது உண்டாகுமோ? (இராமாயணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/234&oldid=1327195" இலிருந்து மீள்விக்கப்பட்டது