பக்கம்:தரும தீபிகை 7.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 வ ா ம் 2333 கருடன்: அந்தோ! கொடிய தீமையை இனம் தெரியாமல் செய்துவிட்டேன்; நீ வித்தியாகரன் போல் தெரி கிறது; ஒரு இராச குமாரயிைருக்க வேண்டும்; நீசமான காரியம் மோசமா நேர்ந்து விட்டதே. சீமூதன்: உனக்கும் இவ்வள்வு இரக்கம் இருக்கிறதா? கருடன்: நான் கொடியவன? என்க்கு இரக்கம் இல்லையா? சிமுதன்: உள்ளம் துடிக்க உயிர்பதைக்க ஊனுடலே அள்ளி விழுங்கும் அருளுடையாய்!--உள்ளிே என்னே வினவி இடையாறி கிற்கின்ருய் அன்னே அனேயாய் அருந்து. இந்த உரையைக் கேட்டதும் கருடன் பதறினன்; யாரோ ஒரு தெய்வீகமான கருணையாளன் என்று அஞ்சின்ை. உறுதி மொழிகள் கூறினன். "இனிமேல் இந்தத் தீமையை நான் செப் யேன்; எனக்கு நல்ல உபதேசம் செய்த ஒரு ஞானகுரு என்றே உம்மை உண்மையாக எண்ணுகிறேன்” என்றுசொல்லி விரைந்து பறந்து போனன். போகவே கருமதேவதை இவன்மேல் அமுக மழை பெய்தது; உடல் சுகமாயது. தங்கள் துயரை நீக்கி யருளிய குலதெய்வம் என்று நாகர் இவனைப் போற்றி வந்தனர். தயாவீரன் என்று உலகம் புகழ இவன் ஒளிபெற்று கிற்கின்ருன். பிறஉயிர்களுக்கு இரங்கி யருளுகின்றவன் பெரிய கருமவானப் அரிய நிலையில் உயர்ந்து இருமையும் பெரு மகிமை களை அடைகிருன். சீவகயை தெய்வீக நிலையை அருளுகிறது. சுகுணதாமன் பரிவு. ஏம கூடத்தின் வடபால் ஒர் எரிமலையில் தீக்குழம்பு பொங்கி எழுந்தது. அதன் அருகேயிருக்க நகர வாசிகள் அஞ்சி அல மந்தனர். ஒரு முதியவள் மேல் வனதேவதையின் ஆவேசம் தோன்றியது. இக்காட்டில் உள்ள அரிய ஒரு பொருளை அம் மலைக் குகையில் போட்டால் இந்த ஆபத்து அடங்கிவிடும் என்ருள். அவ்வாறே முத்து வயிரம் முதலிய அரிய விலையுடைய பொருள்களைத் தெய்வம் தொழுது பெய்து வந்தனர்; அபாயம் அடங்கவில்லை; அந்த அதிசயத்தைக் கேள்வியுற்று அத்தேசத்து அரசகுமாரன் ஆன சுகுண காமன் குதிரை மேல் ஏறி விரைந்து வந்தான்; ஊராரிடம் நிலைமையை உசாவி அறிந்தான்: இக்நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/24&oldid=1326985" இலிருந்து மீள்விக்கப்பட்டது