பக்கம்:தரும தீபிகை 7.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2556 . த ரும தீ பி ைக யை உன் கிலைமை தெளிவா விளக்கியுளது என்னும் குறிப்புகள் பலவும் இதில் கூர்ந்து சிக்திக்கவுள்ளன. தறவாத நீ பிறவித் துயரில் கிற்கின்ருப்; துறந்த நான் பிறவாத பேரின்ப நிலையில் இருக்கிறேன் என்பதும் மருமமா இங்கே தெரிய வந்தது ஆசையற்ற துறவி விண்ணில் பறக்கின்ற கருடன் போல் வீறுகொண்டு திரிகிருன்; அவன் எதிரே அரசர் முதல் யாவரும் சிறியராய் அடங்கி எவ்வழியும் ஒடுங்கி வணங்கி நிற்கின்றனர். துறவிக்கு வேந்தன் துரும்பு என்பது பழமொழியாய் வங்களது. அலெக்சாண்டர் (Alexander) என்பவன் கிரீஸ் தேசத்து சக்கரவர்த்தி; பெரிய போர் வீரன்; மேல் நாடுகளில் பல தேசங்களை வென்று கைக்கொண்டான்; பின்பு ஈம் இந்தியா மீது படை எடுத்து வந்தான்; அவ்வாறு வந்த போது சிந்து நதிக்கரை அருகே ஒருகாட்டில் கூடாரம் அமைத்துச் சேனைகளோடு தங்கி யிருக்கான்; மறுநாள் மாலையில் தளபதி களோடு உலாவி வரும் போது ஒரு துறவியைக் கண்டான். யா தொரு கணையும் இன்றி யாவும் துறந்த தன்னக் கனியே இருக்க அவரைக் கண் டதும் மன்னன் பெரிதும் வியந்தான்; கிட்ட நெருங்கிச் சிறிது நேரம் உற்று நோக்கினன்; யாதம் பேசாமல் அவர் மவுனமா யிருக்கார்; நீண்ட வேல்கள் ஏந்திய சில போர் வீரர்கள் சூழ மன்னன் வந்து நிற்பதைக் கண்டும் சிறிதும் மதியாமல் உறுதி பூண்டிருக்கும் துறவி மீது அவனுக்குப் பி ரி ய ம் நீண்டக: 'கான் பெரிய சக்கரவர்த்தி; என் தேசத்தக்கு நீர்வர வேண்டும்; உம்மை அழைத்துப் போகிறேன்; பொன்னும் பொருளும் கிறையத் தருகிறேன்; சிறந்த அரண்மனையில் அமர்ந்து சுகமாய் வாழலாம்” என்று அவன் உவகையோடு சொன்னன். 'எனக்கு யாதும் வோண்டாம்; நீ ஒதுங்கிப் போ; அதுவே எனக்குப் போதும்' என்று துறவி சாதுவாய் உரைத்தார். என் வார்க் தைக்கு மாறு கூறுவதா என்று அவன் சீறிச்சினத்தான்; தனது கூரிய வாளை நேரே நீட்டிக் காட்டி இதல்ை உன் கலேயைத் தணித்து எறிவேன் என்று கொதித்து கின்ருன்; கொலை கோக் கோடு உருத்து கின்ற அவனைப் பார்த்து இவர் அமைதியாய்ச் சிரித்தார்; சிரிக்கவே அம்மன்னன் வியந்தான்; மனம் தெளிக் தான்; வணங்கி வாழ்த்தினன். இந்த கிகழ்ச்சி அவனுடைய சரித்திரத்தில் அதிசயமான ஒரு புகழ்ச்சியாய் வந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/247&oldid=1327208" இலிருந்து மீள்விக்கப்பட்டது