பக்கம்:தரும தீபிகை 7.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2575 புகழ்ந்து போற்றுகின்றனர். பற்று அற்றவன் பரமன் ஆகிருன் என்பது பழமொழி. மாசு கழிய ஈசன் வெளியாகிருன். கருடை தேசத்தில் அரசயிைருந்த ஒருவன் துறவி ஆன்ை. காளைப் பருவத்திலேயே யாவும் துறந்து அருந்தவ முனிவனப் அப்பெருங்ககை மேவியிருந்தான்; உலக பந்தங்கள் ஒழிந்து நிலவி கின்ற அவனது கிலேமையை அறிக்க மேதினி வியந்து புகழ்ந்தது. பூவனே ஆகி வானம் பொருந்து மேற்கட்டி யாகித் திவம தாகி இந்து செங்கதிர் விசும் காற்று மேவுசா மரமதாகி விடுதலை மனேவி ஆகிக் கேவலம் இன்பம் ஆகிக் கிளர்ச்சியாய் கின்ருன் வேந்தன். (மகாராச துறவு) பூமி பஞ்சனை, வானம் விதானம், சூரிய சந்திரர் விளக்கு கள், காற்று வெண்சாமரை, துறவு மனைவி, தனியிடம் இனிய இன்பம் என அம்முனிவன் அனுபவித்துள்ள சுகபோகங்களை இதில் ஈயமா அறிந்து கொள்கிருேம். அரச துறவி ஆதலால் அந்த வரிசைக்கு ஏற்ப இக்க உருவகம் இனிது இசைந்து கின் றது. யாதொரு பற்றுமின்றி எங்கும் எகமாய் அமர்ந்து எவ் வழியும் பேராத பேரானந்தத்தை நேரே அனுபவித்திருக்கிருன். அரியது துறவறம் அல்லது இல்லை; யான் மருவிய துறவறம் ஒருவி மன்னய்ை உருகெழு முடிகவித்து உலகம் ஆள்வது பெருவிலே மணியினேப் பிண்டிக்கு ஈதலே. மந்திரிகள் வந்து இந்த அரசனை அடைந்து இன்னும் சில நாள் ஆட்சி புரிந்துவிட்டு அதன் பின் துறவி ஆகலாம் என்று வேண்டியபோது அவரை நோக்கி இவன் இவ்வாறு கூறியிருக் கிருன். அரிய மணியை வறிய தினமாவுக்கு விற்றதுபோல் மேலான உறவு நிலையைவிட்டுக் கீழான அரச புலைக்கு வருவது என உவமை கூறியிருப்பது இம்முனிவனது உறுதியுணர்வையும் துறவின் சுவையையும் ஒருங்கே தெளிவா உணர்த்தி கின்றது. துயரத்தை எ வரும் விரும்பார்: சுகத்தையே உயிரினங்கள் எவ்வழியும் இயல்பாப் விரும்பி வருகின்றன; பிறப்பு, இறப்பை யுடையதாய் பாண்டும் துன்பங்களே கிறைந்திருக்கின்றது; ஆகவே பிறவியை நீக்குவதே பேரின்ப நிலை என ஞானிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/266&oldid=1327227" இலிருந்து மீள்விக்கப்பட்டது